வருண பகவானும் வந்திருந்து வாழ்த்த, 20,000 பேர் சூழ மாரியம்மன் குடமுழுக்கு

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழ­மை­யான, தேசிய நினை­வுச் சின்­னங்­களில் ஒன்­றான சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் 13 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் 20,000 பேருக்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் சூழ வெகு சிறப்­பாக குட­மு­ழுக்கு கண்­டது.

இது, 1827ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட இந்த ஆல­யத்­தின் ஆறா­வது குட­மு­ழுக் காகும். பத்­தாம்­கால யாக­பூஜை, தொடர்ந்து கடம் புறப்­பாட்­டிற்­குப் பிறகு காலை 8.20 மணிக்கு ராஜ­கோ­பு­ரத்­திற்­கும் 8.45 மணிக்கு மூல சன்­னி­தி­க­ளுக்­கும் குட­மு­ழுக்கு நடந்­தது.

மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தாது குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள், முதி­ய­வர்­கள், உடற்­கு­றை­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள், ‘ஓம் சக்தி பரா­சக்தி’ என ஒரே குர­லாக மன­மு­ருகி மெய்­ம­றந்து பக்தி முழக்­க­மிட்­ட­னர்.

இக்­கோ­யி­லில் தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் நினை­வுச்­சின்­னப் பாது­காப்பு வாரி­யத்­தின் வழி­காட்­டு­த­லின்­கீழ் பழமை மாறாத வகை­யில் கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக சீர­மைப்புப் பணி­கள் நடந்­தன.

குட­மு­ழுக்­கில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட துணைப் பிர­த­மரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், “இது போன்ற சமய விழாக்­களில் ஒன்றிணைந்த சமூ­க­மாக அனை­வ­ரும் பங்­கேற்­பது, சிங்­கப்­பூ­ரின் பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்­தைப் பிர­தி­பலிக்­கிறது. இதில் கலந்­து­கொண்­டது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது,’’ என்று ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தார்.

“இத்­தி­ரு­விழா நாம் இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் இருந்து மீண்டு வந்­த­தன் அடை­யா­ள­மாய் அமை­கிறது,’’ என்று விழா­விற்கு வந்­தி­ருந்த போக்­கு­வ­ரத்து அமைச்­சர் திரு எஸ் ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, “இந்­துக்­கள் அல்­லா­தோ­ரும் விழா­வில் கலந்­து­கொண்டு தொண்­டூ­ழி­யத்­தி­லும் ஈடு­ப­டு­வது நாம் ஒன்­றி­ணைந்த சமூ­க­மாக வாழ்­வதை எடுத்­துக்­காட்­டு­கிறது,” என்­றார்.

“அன்­ன­தா­னத்­தில் 15,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பித்­தது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது“ என்று இந்து அறக்­கட்­டளை வாரிய தலைமை நிர்­வாக அதி­காரி த. ராஜ சேகர் கூறி­னார்.

“குட­மு­ழுக்கு ஏற்­பா­டு­கள், சீர­மைப்புப் பணி­கள் என மொத்­தம் $3.5 மில்­லி­யன் செல­வில் இவ்­விழா பிரம்­மாண்டமான முறை­யில் அரங்­கே­றி­உள்ளது.

“கோயில் ஊழி­யர்­கள், தொண்­டூ­ழியர்­ என 2,000க்கும் மேற்­பட்­டோ­ரின் கடும் உழைப்பை பக்­தர்­க­ளின் மன­நிறை­வில் காண­ மு­டி­கிறது“ இந்தக் கோயி­லின் தலை­வர் எஸ். லட்­சு­ம­ணன் கூறி­னார்.

குட­மு­ழுக்­கைத் தொடர்ந்து தொடங்­கிய அன்­ன­தா­னம் மாலை 4 மணி வரை நடந்­தது. அதன்­பின் இரவு 7 மணி­மு­தல் நடந்த முரு­கன்-வள்ளி-தெய்­வானை; ராமர்-சீதா; விஸ்­வ­நா­தர்-விசா­லாட்சி திருக்­கல்­யா­ணங்­க­ளி­லும் நூற்றுக்­க­ணக்­கான பக்­தர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!