இந்தியச் சந்தையில் நாட்டம் செலுத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

வளர்ந்து வரும் இந்­திய விமானத் துறைச் சந்­தை­யில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நாட்­டத்தை அதி­க­ரித்­துள்­ளது.

இந்­திய விமா­னத் துறை­யின் அள­வை­யும் வாய்ப்புகளுக்­கான சாத்­தி­யங்­க­ளை­யும் பொறுத்­த­வரை­ வளர்ச்சி வாய்ப்­பு­கள் அதி­கம். இதைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த சிறப்­புப் பேட்­டி­யில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) குழு­மத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு கோ சூன் ஃபோங், 60.

இந்­திய விமா­னத் துறைச் சந்­தை­யில் தற்­போது ஏற்­பட்டு வரும் இணைப்­புகள், ஏர் இந்­தியா வளர்­வ­தற்­கும் இந்­தி­யாவின் வளர்ச்சி மூலம் நாம் நன்மை­ய­டை­வ­தற்­கும் நிறைய வாய்ப்­பு­கள் உள்­ளன என்­றார் அவர்.

ஏர் இந்­தி­யாவை கைய­கப்­படுத்­தும் முயற்­சி­யில் ஒழுங்கு முறைக் கண்காணிப்பு அமைப்பின் ஒப்­பு­த­லுக்­காக டாடா குழு­மம் காத்­துக்­கொண்­டி­ருக்­கிறது. நிபந்­த­னை­கள் ஏற்று­க் கொள்­ளப்­பட்­டால் தற்­போது எஸ்­ஐ­ஏ­வும் ஏர் இந்­தி­யா­வும் பங்­கு­தா­ரர்களாக உள்ள விஸ்­தாரா ஏர், புதுப்­பிக்­கப்­பட்ட ஏர் இந்­தியா நிறு­வ­னத்­து­டன் அடுத்த ஆண்டு முதல் காலாண்­டில் ஒன்­றி­ணைக்­கப்­படும்.

திட்­ட­மிட்­ட­படி இணைப்­பு­கள் நடந்­தால் ரூ.20,585 மில்­லி­யன் (S$360 மில்­லி­யன்) கூடு­தல் முத­லீட்­டு­டன் ஏர் இந்­தி­யா­வில் எஸ்­ஐஏ 25.1% பங்­கைப் பெறும்.

இந்­தத் தொகை ரூ.50,200 மில்­லி­யன் ($880 மில்­லி­யன்) வரை எட்­ட­லாம். மீத­முள்ள 74.9% பங்கு டாடா­வைச் சேரும். இது S$1.07 பில்­லி­ய­னுக்­குச் சம­மான முத­லீடு மூலம் சாத்­தி­ய­மா­கும்.

எஸ்­ஐ­ஏ­வின் “பல மைய” உத்­தி­யில் உள்­ள­டங்­கும் இந்த முத­லீடு உலக விமா­னத் துறை­யில் மூன்­றாம் இடத்­தி­லி­ருக்­கும் இந்­தி­யா­வில் தடம்­ப­திக்க வழி­வகுக்­கும் என்று திரு கோ விளக்­கி­னார்.

“உள்­நாட்டு விமா­னக் கட்­ட­மைப்பு எஸ்­ஐ­ஏ­விற்கு இல்­லாத பட்­சத்­தில், உல­க­ள­வில் தடம் பதிப்­ப­தற்கு பங்­கா­ளித்­து­வங்­களும் பல மைய உத்­தி­யும்­தான் வழி­கள்,” என்­றார் திரு கோ.

இந்­தி­யாவை உல­கின் மற்ற பகு­தி­க­ளுக்கு இணைக்­கும் அனைத்­து­லக விமான சேவை நிறு­வ­னங்­களில் ஏர் இந்­தியா முக்­கிய பங்கு வகிக்­கும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

இண்­டி­கோ­விற்கு அடுத்­த­படி­யாக இந்­தியா­வின் இரண்­டாம் பெரிய விமான நிறு­வ­ன­மான ஏர் இந்­தியா அண்­மை­யில் 470 புது விமா­னங்­களை போயிங், ஏர்­பஸ் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து வாங்­கி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 நெருக்­க­டி­யின் போது எடுக்­கப்­பட்ட விரை­வான மீட்சி நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் பேசி­னார் 2011ஆம் ஆண்டு முதல் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகப் பொறுப்பு வகிக்­கும் திரு கோ.

நிறு­வ­னத்­தின் வர­லாற்­றில் ஆக மோச­மான சவால் எனக் கரு­தப்­படும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பிரச்­சி­னை­யி­லி­ருந்து மீண்டு வந்­துள்­ளது எஸ்ஐஏ.

இவ்­வாண்டு மார்ச் 31ஆம் தேதி­யு­டன் நிறை­வ­டைந்த அதன் நிதி ஆண்­டில் $2.16 பில்­லி­யன் நிகர லாபத்தை நிறு­வ­னம் பெற்­றுள்­ளது. அதன் கீழ்­நிலை ஊழி­யர்­க­ளுக்கு கிட்டத்­தட்ட எட்டு மாத போனஸ் வழங்­க­வுள்­ள­தாக அந்­நி­று­வ­னம் அறி­வித்­தது.

கிரு­மித்­தொற்று காலத்­தில் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட சிலர் உட்­பட 3,000க்கும் மேற்­பட்ட விமா­னத்­துறை ஊழி­யர்­களை கடந்த 12 மாதங்­களில் பணி அமர்த்­தி­யுள்­ளது எஸ்­ஐஏ.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­து­டன் ஒப்­பி­டும்­போது அப்­ப­கு­தி­யின் விமான நிறு­வ­னங்­கள் ஒட்டுமொத்­த­மாக யுஎஸ் $10 பில்­லி­யன் இழப்பில் உள்­ளன.

“கிரு­மித்­தொற்­றுக் காலத்­தில் நாம் ஆயுத்த பணி­களில் ஈடு­பட்­ட­தால் விரை­வில் பய­ணி­கள் எண்­ணி­கையை உயர்த்த முடிந்­தது,” என்­றார் திரு கோ.

சாங்கி விமா­ன­நி­லைய ஐந்­தாம் முனை­யம் 2030ல் திறக்­கப்­ப­டும்­போது, அதி­க­ரிக்­கும் பய­ணி­கள் எண்­ணிக்­கை­யைச் சமா­ளிப்­ப­தன் சவால் குறித்­தும் திரு கோ சுட்­டி­னார். ஸ்கூட்டை உள்­ள­டக்­கிய எஸ்­ஐஏ குழு­மம் சாங்கி விமான நிலைய பய­ணி­கள் போக்­கு­வ­ரத்­தில் 55% கொண்­டுள்­ளது.

svenga@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!