ஏற்றுமதி எதிர்பாரா சரிவு

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய ஏற்­று­ம­தி­கள் எதிர்­பா­ராத வீழ்ச்­சி­யைக் கண்­டுள்­ளன. தொடர்ந்து எட்­டா­வது மாத­மாக எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­மதி மே மாதத்­தி­லும் சரிந்­துள்­ளது.

ஏப்­ரல் மாத 9.8 விழுக்­காட்­டு வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆண்டு அடிப்­ப­டை­யில் மே மாதத்­தில் 14.7 விழுக்­காடு வீழ்ச்சிகண்டது என எண்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டின.

புளூம்­பெர்க் கருத்­துக் கணிப்­பில் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கணித்­தி­ருந்த 7.7% வீழ்ச்­சி­யை­விட இது அதி­கம்.

பண­வீக்­கத்­தைக் கணக்­கில்­கொண்­ட­பின் எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­மதி 7.6 விழுக்­காடு குறைந்­துள்­ளது. இது ஏப்­ர­லில் 3.1% ஆக இருந்­தது.

மே மாத எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­மதி சரி­வுக்கு மின்­னணுத் துறை ஏற்­று­ம­தி­கள் மிகப்­பெ­ரிய பங்­காற்றியது.ஆண்டு அடிப்­ப­டை­யில் இது 27.2% வீழ்ச்­சி­ய­டைந்­தது. ஏப்­ரல் மாத 23.3% சரி­வை­விட இது அதி­கம்.

ஆண்டு அடிப்­ப­டை­யில், ஏப்­ரல் மாத 23.3 விழுக்காடு சரி­வைத் தொடர்ந்து மே மாதத்­தில் 27.2 விழுக்காடு குறைந்­தது. ஒருங்­கிணைந்த மின்­சுற்று (ஐசி), அதன் பாகங்­கள், டிஸ்க் மீடியா பொருள்­க­ளின் 48.7 விழுக்காடு ஏற்­று­மதி வீழ்ச்சி இதில் பெரும்­பங்கு வகித்­தது.

மின்­னணு அல்­லாத எண்­ணெய் சாரா ஏற்­று­மதி ஏப்­ரல் மாத 5.8% சரி­வைத் தொடர்ந்து மேயில் 10.7 விழுக்காடு சுருங்­கி­யது. சிறப்பு இயந்­தி­ரங்­கள், பெட்­ரோ­லிய ரசா­ய­னம், மருந்­துப்­பொருள் களால் இந்­தச் சரிவு ஏற்­பட்­டது.

2022ஆம் ஆண்­டின் மே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற மே மாதத்­தில் மருந்­துப் பொருட்­க­ளின் ஏற்­று­மதி 14% குறைந்­துள்­ளது. இது மார்ச்­சில் 27.8%, ஏப்­ர­லில் 26.7% மித­மான வளர்ச்­சி­யைக் கண்­டது.

ஏப்­ர­ல் மாத 2.6 விழுக்­காட்டு வளர்ச்­சி­யைக் கண்­டி­ருந்த நிலை­யில், எண்­ணெய் சாரா ஏற்­று­மதி மாதாந்­திர அடிப்­ப­டை­யில் மேயில் 14.6 விழுக்­காடு குறைந்து $13.8 பில்­லி­ய­னாக இருந்­தது.

2022 மே மாதத்­து­டன் ஒப்பிட, கடந்த மே மாதத்­தில் மொத்த வர்த்­த­கம் 17.9% குறைந்­துள்­ளது, இது ஏப்­ரல் மாதத்­தில் 18.9 விழுக்காடு சுருக்­கம் கண்­டி­ருந்­தது.

ஹாங்­காங், மலே­சியா, தைவான் உள்­ளிட்ட சிங்­கப்­பூரின் முதல் 10 சந்­தை­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்­கான ஏற்­று­மதி வீழ்ச்சியைக் கண்­டது.

எனி­னும், சீனா, அமெ­ரிக்­கா­விற்­கான இப்­பொ­ருள்­க­ளின் ஏற்­று­மதி முறையே 3.7%, 4.8% அதி­க­ரித்­துள்­ளது.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூ­ரின் அறிக்­கை­யின்­படி, ஜன­வரி முதல் மே வரை­யி­லான காலத்­தில் எண்­ணெய் சாரா பொருள்­களில் 15.2 விழுக்­காட்டு பங்­கைக் கொண்டு, சிங்­கப்­பூ­ருக்­கான இரண்­டா­வது பெரிய ஏற்­று­மதி சந்­தை­யாக சீனா உள்­ளது.

சீனா­வுக்­கான சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­மதி சுருங்கி வரும்­நி­லை­யில், மே மாத 3.7% அதி­க­ரிப்பு 2022 ஜூன் மாத 2.1% அதி­க­ரிப்­புக்­குப் பிற­கான முதல் அதி­க­ரிப்பு ஆகும்.

கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் காலாண்டு வர்த்­த­கச் செயல்­பாட்­டின் மதிப்­பாய்­வின்­படி, எண்­ணெய் சாரா உள்­நாட்டு ஏற்­று­மதி முந்­தைய காலாண்­டின் 14 விழுக்காடு சரி­வைத் தொடர்ந்து, இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 16.2 விழுக்காடு சரிந்­துள்­ளது

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அதன் ஏற்­று­மதி கணிப்­பைக் குறைத்­துள்­ளது.

இந்த ஆண்டு எண்­ணெய் சாரா ஏற்­று­மதி 8 முதல் 10 விழுக்­காடு வரை வீழ்ச்சியடையும் என்று அது கணித்துள்ளது. முன்­னர் இந்த வீழ்ச்சி 0 முதல் 2 விழுக்­காடு வரை இருக்கும் என அது கணித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!