மார்சிலிங் பூங்காவில் மரம் விழுந்து மாது மரணம்

மார்சிலிங் பூங்காவில் இன்று காலை 20 மீட்டர் உயரமுள்ள மரம் ஒன்று விழுந்ததில் ஒரு பெண்மணி உயிரிழந்தார்.

இது குறித்து காலை 8.15 மணிக்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் வந்தது.

Remote video URL

படை வீரர்கள் அங்கு வந்தபோது விழுந்த மரத்தின்கீழ் அப்பெண்மணி சிக்கிக்கொண்டிருந்தார்.

இதர வெட்டு சாதனங்களை கொண்டு அப்பெண்மணியை மீட்பதாக இருந்தது.

சம்பவ இடத்திலேயே அந்த 38 வயது பெண்மணி உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Araucaria excelsa எனும் பெயர்கொண்ட இம்மரம் கட ந்தாண்டின் ஏப்ரல் மாத சோதனையில் ஆரோக்கியமாகத்தான் இருந்தது என்று தேசிய பூங்காக் கழகத்தை சேர்ந்த டாக்டர் லியோங் சீ சியூ கூறினார்.

"ஒருவர் இறந்துவிட்டதில் வருத்தம் அடைகிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகுந்த உதவி புரிவதில் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய பூங்காக் கழகமும் இச்சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர் கேடன் டியோ, மரம் விழுவதற்கு முன், பலத்த முறியும் சத்தம் கேட்டதாகவும் தம்மை உட்பட சுமார் 10 பேர் மரத்தை தூக்கி சிக்கிய பெண்மணியை விடுவிக்க முயன்று பலன் இல்லாமல் போனது என்றும் சொன்னார்.

சம்பவம் நடந்து குறிகிய நேரத்திற்குள் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை வீரர்கள் அங்கு வந்துவிட்டனர் என்றார் அம்மாணவர்.

இதே போன்ற சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி நடந்தது.

அதில் சிங்கப்பூர் பூமனையில் ஒரு 38 வயது இந்திய பெண்மணியின் மீது 40 மீட்டர் உயர 'தெம்புசூ' மரம் ஒன்று விழுந்து உயிர் இழந்தார். அச்சம்பவத்தில் அவரது கணவரும் இரு குழந்தைகளும் காயமடைந்தனர் ஆனால் உயிர் தப்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!