கவிதையைக் கண்டடைந்த பயிலரங்கு

வளரும் இலக்கியத் தலைமுறை யினருக்குக் கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக் கத்தில் தேசிய கலைகள் மன்றத் துடன் இணைந்து தமிழ் முரசு நாளிதழ் தொடங்கியுள்ள படைப்பு இலக்கியத் திட்டத்தின் ஓர் அங்க மாக கடந்த 5ஆம் தேதி கவிதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

புதிய, வளரும் எழுத்தாளர்கள் தங்களது படைப்பாற்றலை வளர்க்க உதவும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில் பங்கேற்ற இளையர்களில் ஒருவரான யுனோயா தொடக்கக் கல்லூரி மாணவி பாரதிதாசன் மொமெதா, சுருக்கமாக எப்படிக் கவிதை எழுதுவது என்பதைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

https://www.facebook.com/tamilmurasu/videos/325764724808982/

தேவையற்ற சொற்களைத் தவிர்ப்பது எப்படி என்பது போன்ற மிக முக்கிய அம்சங்களைப் புரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

"நான் பொழுதுபோக்காக அவ் வப்போது கவிதைகள் எழுது வேன். அவற்றில் என்ன குறைகள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்காக இப்பயிலரங்கில் பங்கேற்றேன். இதுவரை நான் எழுதிய கவிதைகளையே நான் மாற்றி எழுதவுள்ளேன். ஒவ்வொரு சொல்லையும் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்," என்றார் பகுதிநேரமாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் திரு அஷ்ரஃப் அலி.

"பள்ளிப் போட்டிகளில் பங்கு பெற்றதன்மூலம் கவிதை மீது ஆர்வம் ஏற்பட்டது. கவிதையைத் தொடங்குவது எப்படி, முடிப்பது எப்படி, அதன் நோக்கம் என்ன, சொல்லவருவதை தெளிவாகவும் நேர்த்தியாகவும் சொல்வது எப்படி போன்ற அம்சங்களை பயிலரங்கில் அறிந்துகொண்டேன்," என்றார் தனியார் கல்விக் கழக மாணவி யான கௌரி.

"இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் எழுதப்பட்ட கவிதை களின் சூழல்களை திரு வேணு கோபால் விளக்கியபோது அந்தக் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. கவிதை குறித்த புதிய அனுபவமும் கிடைத்தது," என்று கூறினார் திரு ஜனார்த்தனன்.

"திரைப்படப் பாடல்கள் விஷயத் தையும் கருத்துகளையும் நேரடி யாகச் சொல்லும். கவிதை பல அடுக்குகளைக் கொண்டது என்ற திரு வேணுகோபால், அதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி யது பயனுள்ளதாக அமைந்தது," என்றார் அவர். பல கவிதைகளை வாசித்துப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததாகப் பயிலரங்கில் பங்கேற்ற பலரும் கருத்துரைத்தனர். காலை 9.30 மணி முதல் 5 மணி வரை நடை பெற்ற இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள் கவிதை எழுது வது, வாசிப்பது குறித்து கேள்வி கள் எழுப்பி, விளக்கம் பெற்றுத் தெளிவடைந்தனர்.

திரு சு.வேணுகோபால் பயிலரங்கில் முன்வைத்த கருத்துகளின் சுருக்கம்:

கவிதை ஒரு மனநிலை

எழுதத் தூண்டும் ஒரு விஷயத்தை ஒருவர் சிறுகதையாகத் தர விரும் புவதும் ஒருவர் கவிதையாகத் தர விரும்புவதும் ஒருவித படைப்பு மனநிலை. புதிதாக எழுத வருப வர்கள் தங்களுக்குள் குமிழியிடும் கலை மணம் எது என்று அறிந்து கைவசப்படுத்த வேண்டும்.

கவிதை எப்போதும் இரவல் குரலில் ஒலிக்காது. ஒரு கவிதை சொந்தக் குரலில் இருப்பது முக் கியம். தன் அனுபவத்திலிருந்து, தன் வலியிலிருந்து, தன் கற்பனை யிலிருந்து, தன் கோபத்திலிருந்து உருவாகி வரவேண்டும். மற்ற கவிதைகளில் காணப்படும் சொற் றொடர்களைப் பயன்படுத்தக் கூடாது.

கனமான சொற்களைப் பொருத் தமற்ற முறையில் பயன்படுத்து வோர் உண்டு. "உன் பார்வையின் கிரேன் தாக்குதலில் பிளவுற்று வெடித்தது மூளை" என பெரிய பெரிய வார்த்தைகளை அடுக்கு வதால் கவிதையை அதற்குள் பிடித்து வைத்துவிடலாம் என்பது ஏமாற்று வித்தை. கவிக்குரலும் அதன் சொற்களும் பிரித்துவிட முடியாத ஒரு இசைவான உயிரி ழையில் சேர்வதுதான் கவிதை.

சொற்பொருளறிந்து பயன்படுத்துக

அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்லக்கூடாது. அருவி என்பது பொங்கிப் பிரவாகம் எடுக்கக் கூடியது. குதூகலத்தை உண்டாக் கும் அருவியை நீர்த்தொடர் என்று சொல்லும்போது அதன் மகத்தான அனுபவத்தை இல்லாமல் ஆக்கி விடுகிறது.

வித்தியாசமாகச் சொல்கிறோம் என்பதற்காக யானை குஞ்சு பொரித்தது, கிளி ஈனியிருக்கிறது என மரபுத்தொடர்களை மாற்றி எழுதக்கூடாது.

புற உலகை உற்றுநோக்குங்கள்

கவிதை எழுதுவோர் புற உலகின் இயற்கைக் கோலங்களை ஆழமாக உற்றுநோக்கும் பண்பைப் பெற்று இருத்தல் வேண்டும்.

கவிதையைக் கண்டடையுங்கள்

கவிதை ஏதோ ஒரு தருணத்தில் பளிச்சென தன் முகத்தைக் காட் டும்போது கவிஞன் அதனைத் தன் மொழிவலையால் பின்னி ஒளிர விடுகிறான்.

பலநாள் அனுபவங்கள் நம்மை அறியாமலேயே திரண்டு ஒருநாள் ஒரு பொறிபோல தெறிக்கும்போது கவிதை மலர்கிறது. வழக்கமான தடத்திலிருந்து விலகிப் பார்க்கும் போது மறைந்து இருந்த ஓர் அபூர்வத்தன்மை கண்ணில்பட, கவிதையாக வரும்.

"ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவதுபோல" என்கிறார் தேவதச்சன். முதலில் ஒன்றன் மீதான பார்வை, அது உண்டாக்கும் வெளிச்சம்.

அந்த வெளிச்சத்தை மொழி யில் வடிப்பது கவிதை. தேர்ந்த கவிஞன் அதனைக் கவிதையாக் கும்போது இரத்தினச் சுருக்கமான மொழிக்குள் கொண்டுவந்து விடு கிறான்.

கவிதை என்பது கதை சொல்வதல்ல

கவிதை நெகிழ்வோடும் அதிக மான விளக்க வரிகளோடும் பிறந்து வரும். மீண்டும் மீண்டும் வாசித்து தேவையற்ற சொற்களை நீக்கி அதனைச் செம்மைப்படுத்த வேண்டும். கவிதை என்பது கதை சொல்வதல்ல, ஓர் உண்மையை எடுத்துத்தர முனைவது.

கருத்தை முன்வைப்பதை பலர் கவிதை என்று சொல்லிவந்துள் ளனர். கவிதை என்பது அனுப வத்தைப் பகிரும். அந்த அனுபவம் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புது அனுபவத்தைத் தரும். கவிஞன் தான் கண்ட அபூர்வமான தருணத்தைக் கவிதையின் வழி வாசகனுக்கும் தர முனைகிறான்.

ஒரு சிந்தனையோ, அனுப வமோ, கவிதையாக மனதில் உருக் கொண்டு மொழியில் கொண்டு வரும்போது தப்பிப்போய் விடலாம். அப்படி நேரும்போது கவிதை ஒரு செய்தியாக மட்டுமே எஞ்சிவிடு கிறது.

எனவே, ஒரு சிறந்த கவிதையை சுயமான குரலில், சுயமான கற்ப னையில், சுயமான சொற்களில், சுயமான அனுபவத்தில், செறிவான விதத்தில் நாம் கவனித்திரா மனித வாழ்வின் அகத்தையோ, புறத்தையோ, மர்மத்தையோ, வெளிச்சத்தையோ, புதிதாகத் திறந்துகாட்டுகிறது.

இப்படியான கவிதைகளை எழுத தீவிரமான வாசிப்புநிலையில் இருக்க வேண்டும்.

மெய்யான கவிதைகளை வாசித்து வாசித்து தனது கவிதை களின் வாசல்களைக் கண்டறிய வேண்டும். அந்த வாசல்களைத் திறந்துவைக்கிற வேலைதான் கவிதை எழுதுவது என்பது.

கவிதை ஒரே வாசிப்பில் புரிந்துவிட வேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறானது. திரும்பத் திரும்ப அதனை அணுகும்போது தான் அது தன்னைத் திறக்கும். தன்னுள் பல்வேறு காட்சிகளை அறிமுகப்படுத்தியபடி உள்ளே இழுத்துச் செல்லும். கவிதை வெளியிலிருந்து அறிய முடியாது. உள்முகப் பயணத்தில் செல்ல வேண்டும்.

கவிதையை நிறுத்தி வாசிக்கும் இடம் எது, முன்வரியையும் அடுத்த வரியையும் பிரித்து வாசிப்பதால் புரியாததுபோல் இருக்கும். நிறுத்தி வாசிக்கும் இடம் எது, முன்வரி யையும் அடுத்த வரியையும் பிரித்து வாசிப்பதா, இணைத்து வாசிப்பதா, எங்கே காற்புள்ளி, முற்றுப்புள்ளி வைப்பது போன்ற கூறுகள் வாசிப்பால் தெளிவடையும் போது கவிதை புரியும். வாசித்த உடன் புரிவது என்பது சாதாரண கவிதையின் தன்மை. தன்னுள் புதைந்திருக்கும் பிரம்மாண்டத்தை தரிசனமாக்குவதே நல்ல கவிதை. வாசகர்கள் நல்ல கவிதைகளை அடையாளம் கண்டுகொள்வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!