விசை - உங்கள் எழுத்துகளுக்கான களம்

இளையர்களே உங்கள் படைப்பு களை வெளியிடவும் உங்கள் எழுத்தாற்றலை வளர்க்கவும் அமைக்கப்பட்டுள்ள களம் விசை. 

சிறுகதை, கவிதை எழுதும் உங்கள் திறனை மேம்படுத்தும் நோக்கில் மே மாதம் இரு பயிலரங்குகள் நடத்தப்பட்டன. 

 

தமிழகத்தின் பெயர் பெற்ற எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், சுனில் கிருஷ்ணன் இருவரும் நடத்திய அந்த கவிதை, சிறுகதைப் பயிலரங்குகளில் அனுபவமுள்ள எழுத்தாளர்களும் எழுதும் ஆர்வம் உள்ளவர்களும் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

பயிலரங்கு குறித்த விவரங் களை https://www.tamilmurasu.com.sg/visai-workshop என்ற தமிழ் முரசு இணையப் பக்கத்தில் நீங்கள் காணலாம்.

தொடர்ந்து ஜூலை மாதம் இரு பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கவிதைப் பயிலரங்கு ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். 

சிறுகதைப் பயிலரங்கிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

இந்த முறை விறுவிறுப்பான, சாகச, குற்றப் பின்னணிக் கதைகள் எழுத அத்துறையில் அனுபவம் உள்ள  இளம் எழுத்தாளர் பயிற்சி அளிப்பார். 

அதேபோல் மனச்சித்திரங் களை எப்படிக் கவிதையாக்குவது என்பதை கவிதைப் பயிலரங்கில் பங்கேற்றுத் தெளிவு பெறலாம்.

பயிலரங்கில் பங்கேற்க மாண வர்களுக்கான கட்டணம் $10.00, பெரியவர்களுக்கான கட்டணம் $15.00. 

பயிலரங்கில் பங்கேற்க விரும்பினால், tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள். 

மேல் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் எழுதலாம்.

பயிலரங்கு பற்றிய விவரங் களுடன் உங்களது படைப்புகளும் தமிழ் முரசு இணையத் தளத்தின் விசை எனும் பிரிவில் இடம்பெறும். 

உங்கள் கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகளை நீங்கள் இந்தப் பகுதிக்கு அனுப்பி வைக் கலாம். 

தகுதியான படைப்புகள் தமிழ் முரசு இணையத்தளத்தின் விசை பிரிவில் பிரசுரமாகும்.