தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகை 80 நாள்களில் சுற்றிய 81 வயது நண்பர்கள்

1 mins read
1407c585-46bc-4f77-a39a-b3a91e8bf3fc
படம்: AROUNDTHEWORLDAT80/FACEBOOK -

அண்டார்டிக்கா, வடதுருவ ஒளி, எகிப்தின் நைல் நதி, எவெரஸ்ட் சிகரம் என உலகை 80 நாள்களில் சுற்றியுள்ளனர் இரண்டு நண்பர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஹம்பை, சாண்டரா ஹேஸ்லிப் ஆகிய இரு பெண்களும் உலகின் 7 கண்டங்களை 80 நாள்களில் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

81 வயதான இவ்விருவரும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 81ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இருந்து தங்களது பயணம் தொடங்கியதாக கூறினர்.

80 நாளில் உலக வலம் ( Around The World In Eighty Days) என்னும் புத்தகத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இருவரும் உலகைச் சுற்றி வர முடிவெடுத்ததாகக் கூறினர்.

இரண்டு பெண்களும் ஏப்ரல் 1ஆம் தேதி தங்களுது வீடுகளுக்குத் திரும்பி உலகப்பயணத்தை நிறைவு செய்தனர்.

உலகச் சுற்றுலா சென்ற இருவருக்கும் செலவுகள் அதிகம் இல்லை என்றும் தெரிவித்தனர். பொதுவாக ஒரு நாள் ஹோட்டல் அறையில் தங்க 38 வெள்ளி செலவு செய்ததாகக் கூறினர்.

மெரும்பாலான பயணத் திட்டங்களை தாமாகவே செய்துகொண்டனர் அப்பெண்கள்.

இருவருக்கும் தற்போது சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

சரியான திட்டம் வகுத்து உலகை சுற்றி வாருங்கள், சொகுசான வாழ்க்கையை ஓடங்கட்டுங்கள் என்று இருவரும் தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்