கணினி மேதை கார்டன் மோர் காலமானார்

1 mins read
f22a0ea8-24ff-4035-b88e-05b970da4d7b
படம்: ராய்ட்டர்ஸ் -

தொழில்நுட்பத்தைக் கணினி மூலம் வேகமாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த கணினி மேதை கார்டன் மோர் காலமானார்.

அவருக்கு வயது 94.

மோர் ஹவாயியில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கார்டன் மோர் பிரபலமான இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர். 1968ஆம் ஆண்டு இன்டெல் நிறுவனம் தொடங்கப்பட்டது.

உலகில் ஏறக்குறைய 80 விழுக்காடு கணினிகளில் இன்டெல் தொழில்நுட்பம் இருக்கும்.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகை 2023ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி மோரின் சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்.

மோர் பல்வேறு நன்கொடை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்