காட்டுத் தீயை அணைப்பதில் இந்தோனீசியாவின் சிரமம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆண்டுதோறும் பற்றி எரியும் காட்டுத் தீயால் தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகள் மோசமான புகைமூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன. அதிலும் சென்ற ஆண்டு அங்கு கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயால் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

மோசமான புகைமூட்டம் காரணமாக இந்தோனீசியாவிலும் பக்கத்து நாடுகளிலும் பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் காட்டுத் தீயை சமாளிக்க சிறப்புக் குழுவை அமைத்திருப்பதாக சென்ற ஆண்டு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித் திருந்தார். இந்நிலையில் இந்த கோடை காலத்தில் இந்தோனீசியாவின் சில இடங்களில் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், காட்டுத் தீயை அணைப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக சிறப்புக் குழு தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை மற்றும் ஆள் பற்றாக்குறை இருப்பதால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அக்குழு தெரிவித்துள்ளது.

காட்டுத் தீயை அணைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் தேவைப்படுவதாகவும் ஆனால் இந்தோனீசிய அரசாங்கத் திடமிருந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்க முடியாது என்று அந்த சிறப்புக் குழுவின் தலைவர் நசீர் ஃபோயிட் கூறினார்.

இந்தோனீசியாவின போக்கோர் கிராமத்தின் அருகேயுள்ள காடு. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!