மாஸ்கோ: அமெரிக்காவுடன் 1987ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார். "எங்களது அமெரிக்க பங்காளிகள் இந்த உடன்பாட்டைத் தற் காலிகமாக நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துவிட்டதால் நாங்களும் இதில் எங்களது பங்களிப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துக்கொள்கிறோம்," என புட்டின் குறிப்பிட்டார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தாங்கள் தயாரிக்கும் அணுவாயுதங்களின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் 1987ஆம் ஆண்டில் உடன்பாடு ஒன்றை செய்துகொண் டன. இந்த உடன்பாட்டிற்கு மதிப்பளிக்காமல் அணுவாயுதங்களை ரஷ்யா தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வரு கிறது. இந்நிலையில், ரஷ்யாவிடம் உள்ள அத்துமீறலான அணுவாயுதங்கள் அனைத்தையும் அழிக் காவிட்டால் அந்நாட்டுடன் தான் செய்துகொண்ட உடன்பாட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று முன்தினம் அறி வித்திருந்தார்.
அணுவாயுத உடன்பாடு தற்காலிகமாக நிறுத்திவைப்பு
1 mins read

