சுடச் சுடச் செய்திகள்

14 வயது சிறுமியின்மீது அமர்ந்த பெண் போலிஸ் அதிகாரி

ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் அங்குள்ள சாலை சந்திப்பில் மாணவர்கள் பலர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 14 வயது பள்ளிச் சிறுமி யின்மீது பெண் போலிஸ் அதிகாரி  ஒருவர்     அமர்ந்திருப்பதையும் அச்சிறுமி தரையில் விழுந்துகிடப்பதையும் காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

போலிசாரின் அந்த செயலை பலர்  இணையத்தில் குறை கூறி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் அந்தச் சிறுமியும் ஒருவர். 

கைது செய்யும்போது அந்தச் சிறுமி போலிசாரை எதிர்த்தாகவும் சிறுமி தப்பித்துச் செல்ல ஒருவர் முயன்றபோது பெண் போலிஸ் அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டதாகவும் போலிஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அந்தச் சிறுமியும் மேலும் மூன்று பள்ளிச் சிறுவர்களும் சேர்ந்து சாலை சந்திப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி இடையூறு விளைவித்ததாகவும் அந்த வழியாகச் சென்ற பேருந்தை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon