போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, பல மாதங்களாக இழுத்தடித்து வரும் பிரெக்சிட் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களைக் கைப்பற்றியது. 1987ஆம் ஆண்டிற்குப் பிறகு அக்கட்சி பெற்ற ஆகப் பெரிய வெற்றி இதுதான். 

முக்கிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 203 இடங்களில் மட்டுமே வென்றது. இது, 1935ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு அக்கட்சிக்கு கிடைத்த மோசமான தோல்வியாகச் சொல்லப்படுகிறது.

நேற்று இரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அது தமது கட்சிக்கு ‘ஏமாற்றமளிக்கும் இரவாக’ அமைந்துவிட்டது என்று தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன் தெரிவித்தார்.

தொழிற்கட்சியை அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வழிநடத்தப் போவதில்லை என்று திரு ஜெரமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next