வூஹான் கிருமித் தொற்று: நேரடியாகக் களத்தில் குதித்த சீனப் பிரதமர்

வூஹான் கிருமித் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வூஹான் பகுதியில் நிலைமையை நேரடி யாகக் கண்டறிய நேற்று சீனப் பிரதமர் லி கெச்சியாங் அங்கு சென்றிருந்தார்.

மர்மமான கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஜின்யின்டான் மருத்துவ மனைக்கு திரு லி சென்றார்.

கிருமித் தொற்று தொடங்கியதிலிருந்து வூஹானுக்கு வருகை தந்துள்ள முதல் மூத்த அரசு அதிகாரியாக உள்ளார் திரு லி.

தற்போது நாட்டில் தலைவிரித்தாடும் இக்கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அவர் மேற்பார்வையிட்டார்.

பச்சை நிற முகக்கவசமும் நீல நிற பாதுகாப்பு அங்கியும் அணிந்தவாறு காணப்பட்ட திரு லி, நோயாளி களுடனும் மருத்துவ ஊழியர்களுடனும் பேசியதாக சீன அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

“நோயாளிகளைக் குணப்படுத்த நீங்கள் முயற்சி எடுக்கும் அதே சமயம் உங்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்று கூடியிருந்த மருத்துவ ஊழியர்களிடம் அறிவுறுத்தினார் திரு லி.

இதற்கிடையே கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த சீனாவின் நிதி அமைச்சும் தேசிய சுகாதார ஆணையமும் 60.33 பில்லியன் யுவான் (S$11.8 பி.) ஒதுக்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் 769 புதிய தொற்றுச் சம்பவங்கள் சீனாவில் பதிவானதாக நேற்று காலை தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

இவற்றைச் சேர்த்து நாட்டில் உறுதிசெய்யப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 2,744.

இதில் அபாயகரமான நிலையில் 461 பேர் உள்ளனர் என்று கூறப்படுகிறது. கிருமித் தொற்று தொடர்பில் 56 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் 81 ஆனது.

அத்துடன் நாடு முழுவதும் 5,794 பேருக்குக் கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் வூஹானின் சமய, இன விவகாரங்கள் பிரிவுக்கான தலைவர் வாங் சியன்லியாங், 62, நேற்று முன்தினம் வூஹான் கிருமித் தொற்றுக்குப் பலியானார். இவரே கிருமியால் உயிரிழந்த முதல் அரசு அதிகாரியாவார்.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் அல்லது சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மனித நடமாட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் சீனப் புத்தாண்டு விடுமுறையை பிப்ரவரி 2 வரை நீட்டிப்பதாக சீனாவின் மாநிலங்கள் சபை அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!