வெற்றியின் விளிம்பில் பைடன்

அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைய 270 அதிபர் மன்ற வாக்குகள் தேவை என்னும் நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் எந்நேரத்திலும் அந்த எண்ணிக்கையை எட்டிப் பிடிக்கும் நிலை உள்ளது. இது இன்றிரவு வரையிலான நிலவரம்.

தமது வெற்றி குறித்துப் பேசிய திரு பைடன், 300க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நடைபெற்று முடிந்தாலும் இறுதி முடிவுகள் வெளிவராத நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திரு பைடன் உரை நிகழ்த்தினார்.

இதுவரை தாம் வெற்றி பெற்றுவிட்டதாகத் தெரிவித்து வந்த கருத்துகளை நிறுத்திக்கொண்ட அவர், தாம் அதிபர் ஆகவிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

டெலவேரில் உள்ள தமது சொந்த நகரான வில்மிங்டனில் சிற்றுரை ஆற்றிய அவர், “நமது வெற்றிக்கான இறுதி அறிவிப்பை நாம் செய்யவில்லை என்றபோதிலும் வெளியாகி உள்ள எண்ணிக்கை நமது வெற்றியைத் தெளிவுபடுத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் நாம் வெல்லப்போகிறோம்,” என்று கூறினார்.

வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தேவைப்படும் 270 வாக்குகளையும் கடந்து 300 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெறப்போவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரங்களில் டிரம்ப்பை முந்திவிட்டதாகவும் நெவாடாவில் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாகவும் தமது உரையில் திரு பைடன் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு வரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி நான்கு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் 264 அதிபர் மன்ற வாக்குகள் என்னும் நிலையில் திரு பைடன் தொடர்ந்தார். குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய பென்சில்வேனியாவில் திரு டிரம்ப்பைக் காட்டிலும் 28,800 வாக்குகள் அவர் அதிகமாகப் பெற்றிருந்தார். இந்த மாநிலத்தில் உள்ள 20 அதிபர் மன்ற வாக்குகள் திரு பைடனின் வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றிருந்தார். அதே நேரம் 214 இடங்களில் வென்றுள்ள திரு டிரம்ப்புக்குக் கிடைத்த வாக்கு விகிதம் அதைவிடக் குறைவு. ஜார்ஜியா மாநிலத்தில் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் திரு பைடன் முந்திச் சென்ற வேளையில் அங்கு மறுஎண்ணிக்கை தவிர்க்கமுடியாதது எனக் கூறப்பட்டது.

ஆயினும் வெள்ளிக்கிழமை மாலையில் நிலவரம் மாறி, வாக்கு வித்தியாசம் 4,000ஆக அதிகரித்தது. அரிசோனாவிலும் திரு பைடனே முன்னணியில் உள்ளார். நெவாடாவில் அவரது முன்னணி வாக்குகள் இருமடங்காகி 22,600ஐ தொட்டன. 95% வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் வாக்குகள் பைடனுக்குச் சாதகமானவை என சிஎன்என் தொலைக்காட்சியின் ஜான் கிங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!