சீனா: ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டது சரியே

ஹாங்காங் நாடாளுமன்றத்திலிருந்து நான்கு ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று மற்ற நாடுகளிடம் அது வலியுறுத்தியது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அந்த நால்வரையும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் எடுத்த முடிவைக் கண்டித்து பதவி விலக இருப்பதாக 15 அரசியல்வாதிகள் சூளுரைத்துள்ளனர்.

இதற்கிடையே, ஜனநாயக ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியது தொடர்பாக பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை பிரிட்டனுக்கான சீனத் தூதரிடம் அந்நாடு பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கை 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் திருப்பி ஒப்படைத்தபோது நெய்யப்பட்ட அரசியல், சட்ட ஒப்பந்தங்களை சீனா மீறியுள்ளதாக பிரிட்டன் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சீனாவின் அதிகாரத்தை அடையாளம் காணாத ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!