இந்தோனீசியாவுக்குத் தடுப்பூசி நன்கொடை

வாஷிங்­டன்: அமெ­ரிக்கா, இந்­தோனீசியாவிற்கு மொடெர்னா நிறு­வ­னத்­தின் நான்கு மில்­லி­யன் கொவிட் தடுப்­பூ­சி­களை வழங்­க­வுள்­ளது.

இந்­தோ­னீசியாவில் மோச­ம­டை­யும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லைக் கையாள உதவ அந்த முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

கோவேக்ஸ் அனைத்­து­ல­கத் தடுப்­பூ­சிப் பகிர்­வுத் திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூ­சி­கள் வழங்­கப்­படும் என்று வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.

கொவிட்-19 நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க சிர­மப்­பட்­டு­வ­ரும் இந்­தோனீசிய மக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க தடுப்­பூ­சி­களை வழங்­கு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் தேசி­யப் பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சலி­வன் கூறி­னார்.

உல­கின் நான்­கா­வது ஆக அதிக மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட நாடு இந்­தோனீசியா. ஆசி­யா­வில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் அது­வும் ஒன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!