நியூசிலாந்து: கொவிட்-19 பாதிப்பு அறவே இல்லாத நிலை மீண்டும் ஏற்படுவது சந்தேகமே

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் சமூக அள­வில் கொவிட்-19 பாதிப்பு அறவே இல்­லாத நிலை மீண்டும் ஏற்­படும் சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்று அந்­நாட்­டின் சுகா­தா­ரத்­து­றைத் தலைமை இயக்­கு­நர் ஏஷ்லி புளூம்­ஃபீல்ட் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 டெல்டா கிருமி வகைப் பர­வலை முறி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­யில் நியூ­சி­லாந்து தீவி­ர­ம் காட்டி வரு­கிறது.

கடந்த ஆண்டு கொவிட்-19 கிரு­மிப் பர­வலை நியூ­சி­லாந்து வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்­தது. அதை­ய­டுத்து, கொவிட்-19 பாதிப்­பின்றி அது இருந்­தது.

கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் மட்­டும் ஒரு­சி­ல­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

ஆனால் இந்த நிலை கடந்த மாதம் மாறி­யது. கொவிட்-19 டெல்டா கிருமி வகை மள­ம­ள­வென பர­வி­யதை அடுத்து நாடு தழு­விய முடக்­க­நி­லைக்கு நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசின்டா ஆர்­டன் உத்­த­ர­விட்­டார்.

நியூ­சி­லாந்­தின் ஆகப் பெரிய நக­ர­மான ஆக்­லாந்­தில் தற்­போது முடக்­க­நிலை நடப்­பில் உள்­ளது. குறைந்த அள­வி­லான

அன்­றா­டப் பாதிப்­பு­கள் பதி­வா­கின்­றன.

"பாதிப்பு அறவே இல்­லாத நிலையை மீண்­டும் எட்­டு­வது சந்­தே­கமே. ஆனால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோரை அடை­யா­ளம் காணும் பணி­கள் தொட­ரும்.

"அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் கண்டு, பரி­சோ­தனை நடத்தி, தனி­மைப்­ப­டுத்­தும் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

"சமூக அள­வி­லான கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­பதே எங்­கள் இலக்கு," என்று திரு புளூம்­பீல்ட் கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் விகி­தத்தை அதி­க­ரிப்­பதே நியூ­சி­லாந்­தின் இலக்கு என்­றார் அவர். மக்­கள்­தொ­கை­யில் 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் வழக்­க­நி­லைக்­குத் திரும்­ப­லாம் என்று அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!