சிங்கப்பூர்-ேஜாகூர் எல்லையைத் திறக்க உத்தேசத் திட்டம்: ஜோகூர் முதல்வர்

ஜோகூர்: மலே­சியா-சிங்­கப்­பூர் எல்­லையைத் திறப்­ப­தற்­கான அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ள் குறித்து ஜோகூர் அர­சாங்­கம் உத்தேசத் திட்டத்தைத் தயா­ரித்­துள்­ளது.

இந்­தத் திட்­டம் விரை­வில் மத்­திய அர­சாங்­கத்­தி­டம் சமர்ப்­பிக்­கப்­படும் என்று ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முகம்­மது தெரி­வித்­த­தாக மலாய் மெயில் குறிப்­பிட்­டது. மாநி­லப் பாது­காப்பு சிறப்­புக் கூட்­டத்­தில் உத்­தேச திட்­டம் ஏற்றுக்­கொள்­ளப்­பட்­ட­தாகவும் அவர் சொன்னார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக் கொண்ட ஜோகூர் ஊழி­யர்­கள் பற்றி விவ­ரங்­கள் கிடைத்­த­தும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை மேலும் தீவி­ர­மாக்­கப்­படும் என்­று அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக மலே­சி­யா­வுக்கு வந்த சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு 83.4% சரிந்­துள்­ள­தாக மலே­சிய புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. மலேசி­யா­வுக்­குக் கடந்த ஆண்டு 4.3 மில்­லி­யன் சுற்­றுப் ­ப­யணி­கள் வருகை தந்­த­னர். ஆனால் 2019ல் 26.1 மில்­லி­யன் பேர் மலே­சி­யா­வுக்கு வந்­த­தாக தலை­மைப் புள்­ளி­ வி­வர அதி­காரி முகம்­மது உஸிர் மஹி­டின் கூறி­னார். "நாட்­டின் சுற்­றுப்­ ப­யண வர­லாற்­றில் ஆக மோச­மான சரிவு இது. கடை­சி­யாக 'சார்ஸ்' நோய் 2003ல் தாக்­கி­ய­போது, சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை 20.4% சரிந்­தது," என்­றார். அனைத்­து­லக அள­வி­லும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வருகை பெரி­தும் சரிந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். 2019ஆம் ஆண்­டில் 1.47 பில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­களை நாடு­கள் வர­வேற்­றன. ஆனால் அது 74% சரிந்து சென்ற ஆண்டு 399 மில்­லி­யன் எனப் பதி­வா­கி­யி­ருந்­தது. ஆசி­யான் நாடு­களும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டன. "சிங்­கப்­பூ­ரில் சுற்­றுப்­ப­ய­ணி­கள் வருகை 85.7% சரிந்­தது. அடுத்த நிலை­களில் மலே­சியா 83.4%, தாய்­லாந்து 83.2% சரிவை எதிர்­நோக்­கின," என்று டாக்­டர் உஸிர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!