சமூகத்தில் ஓமிக்ரான் தொற்று; ஆஸ்திரேலியாவில் விழிப்புநிலை

சிட்னி: கொவிட்-19 தொற்று இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­படும் வெளி­நாட்­டில் இருந்து சென்ற ஒரு­வர் சமூ­கத்­தில் நேரம் செல­வ­ழித்­ததை உறுதி செய்த ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள், மக்­களை அமை­தி­யாக இருக்­கும்­படி வலி­யு­றுத்­தினர்.

இதை­ய­டுத்து அவ­ரு­டன் நெருங்­கி­ய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளை­யும் அவர் சென்று வந்த இடங்­க­ளை­யும் அடை­யா­ளம் காணும் பணி துரி­த­மாக நடை­பெ­று­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

எல்லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தற்கு முன்பே, அதா­வது சென்ற வாரம் சிட்­னிக்­குச் சென்ற அவ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­பதை முதற்­கட்ட பரி­சோ­தனை வலு­வாக காட்டுவ­தாக நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகா­தார அதி­கா­ரி­கள் கூறி­னர்.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட அவர், சிட்­னி­யில் உள்ள கடைத்­தொ­கு­திக்­குச் சென்­றுள்­ளார்.

அவ­ரு­டன் விமா­னத்­தில் பய­ணம் செய்த 14 பேரும் சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அவ­ருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டால், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை ஆறா­கி­வி­டும். ஆனால் சமூ­கத்­தில் நேரம் செல­விட்­டது இவர் மட்­டுமே.

ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளான மற்ற அனை­வ­ருக்­கும் லேசான அறி­கு­றி­கள் தென்­பட்­டா­லும் அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அதே விமா­னத்­தில் பய­ணம் செய்த மேலும் இரண்டு பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்­கும் ஓமிக்­ரான் வகை தொற்று உள்­ளதா என்­பதை உறுதி செய்ய அவ­சர மர­பணு சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் வகை கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்து முடிவு செய்ய ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தேசிய அமைச்­ச­ரவை நேற்று கூடி­யது.

முன்­ன­தாக, மாண­வர்­க­ளுக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் எல்­லை­யைத் திறந்த ஆஸ்­தி­ரே­லியா, அதை மேலும் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒத்திவைத்­தது.

இதற்­கி­டையே, கிறிஸ்­து­மஸ் பண்­டி­கைக்­குள் உள்­நாட்டு எல்­லை­க­ளைத் திறப்­ப­தற்­கான திட்­டங்­க­ளைத் தொடர்ந்து செயல்­

ப­டுத்­து­மாறு மாநி­ல முதல்­வ­ர்­

க­ளி­டம் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"நாம் அமைதியாக முடிவுகளை எடுக்கவேண்டும். ஓமிக்ரான் கிருமிப் பரவலால் அச்சமடைய வேண்டாம்," என்று கேன்பராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.

புதிய உருமாறிய தொற்று சமாளிக்கக்கூடிய ஒன்று என்று கூறினார் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிரேக் ஹண்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!