ஓமிக்ரான் கிருமிப் பரவலால் திணறும் மருத்துவமனைகள்

லண்­டன்: குறை­வான பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறப்­பட்­டா­லும் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் பல நாடு­களில் மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­கள் நிரம்பி வரு­கின்­ற­னர்.

பெரு­ம­ளவு நோயா­ளி­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­காக பிரிட்­டன் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­க­ளைக் கட்டி வரு­கிறது.

தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது நாட்­டின் சுகா­தா­ரத் துறை, போர்க்­கால அடிப்­ப­டை­யில் செயல்­பட வேண்­டி­யுள்­ள­தாக தேசிய மருத்­துவ அமைப்­பின் இயக்­கு­நர் ஸ்டீ­பன் போவிஸ் சொன்­னார்.

கூடு­தல் தடுப்­பூசி போடு­வ­தற்­கான இலக்கை பிரிட்­டன் எட்­டி­விட்­டது. இருப்­பி­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக எச்­ச­ரித்­துள்­ளார் பிரிட்­டி‌ஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன்.

லண்­டன், பிரிஸ்­டோல், லீட்ஸ் உள்­ளிட்ட நக­ரங்­களில் உள்ள எட்டு மருத்­து­வ­ம­னை­க­ளின் தரைத் தளத்­தில் கூடு­தல் படுக்­கை­கள் அமைக்­கப்­படும் என்று தேசிய சுகா­தார சேவை தெரி­வித்­தது.

இத்­தா­லிய மருத்­து­வ­ம­னை­களும் நோயா­ளி­க­ளைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­று­கின்­றன.

சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­படு­வோ­ரில் கிட்­டத்­தட்ட முக்­கால்­வாசி பேர் தடுப்­பூசி போடா­த­வர்­கள் என்­றார் ரோம் நக­ரின் கொவிட்-19 மருத்­து­வ­ம­னை­யின் இயக்­கு­ந­ரான மார்சே.

அந்த மருத்­து­வ­ம­னை­யின் 120 படுக்­கை­களில் 111 படுக்­கை­கள் நிரம்­பி­விட்­டன.

இதற்­கி­டையே, கிழக்கு ஐரோப்­பா­வில் கொவிட்-19 கார­ண­மாக உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­ட­தாக ராய்ட்­டர்ஸ் புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

ஐரோப்­பா­வில் (1,873,253) ஏற்­பட்ட கொவிட்-19 மர­ணங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை கிழக்கு ஐரோப்­பிய நாடு­களில் (1,045,454) ஏற்­பட்­ட­வை­யா­கும். அதி­லும் ர‌ஷ்யா, போலந்து, உக்­ரேன் ஆகிய நாடு­களில் அன்­றாட மரண எண்­ணிக்கை அதி­க­ள­வில் பதி­வா­கின்­றன.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் முத­லில் கண்­ட­றி­யப்­பட்ட தென்­னாப்­பி­ரிக்­காவோ கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளது.

ஏனெ­னில் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மி­யால் அங்கு ஏற்­பட்ட நான்­கா­வது அலை­யைக் கடந்­து­விட்­ட­தாக தென்­னாப்­பி­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

கடந்த வாரம் தொற்­றுக்கு ஆளா­வோர் விகி­தம் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காடு குறைந்­து­விட்­ட­தா­க­வும் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் எட்டு மாநி­லங்­களில் குறைந்­துள்­ள­தா­க­வும் அது கூறி­யது.

இதை­ய­டுத்து அங்கு இரவு நேர ஊர­டங்கு தளர்த்­தப்­பட்­டுள்­ளது. மது­பான விற்­பனை நேரக் கட்­டுப்­பாடு கிடை­யாது. ஆனால் பொது இடங்­களில் கட்­டாய முகக்­க­வ­சம் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்.

அமெ­ரிக்­கா­வில் இரண்­டா­வது நாளாக கிரு­மித்­தொற்று சம்­ப­வங் கள் புதிய உச்­சத்தை எட்­டி­யது. புத­னன்று 488,000ஆக இருந்த தொற்று சம்­ப­வங்­கள் வியா­ழ­னன்று 580,000 மேல் பதி­வா­னது.

இது கிருமிப் பரவல் வேகமாக அதிகரித்து வருவதைக் குறிப்பதாக உள்ளது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வின் நியூஜெர்­சி­யில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வம­னைக்கு சென்று சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை 60 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!