ஓமிக்ரான்: 4வது தடுப்பூசி ஓரளவுதான் பாதுகாப்பானது

ஜெரு­ச­லேம்: ஓமிக்­ரா­னுக்கு எதி­ராக நான்­கா­வது தடுப்­பூ­சி­ ஓரளவு மட்டுமே செயல்திறன்மிக்கதாக உள்­ள­து என்று இஸ்­ரேல் கூறி­யுள்ளது.

டெல் அவி­வில் உள்ள ‌ஷீபா மருத்­துவ மையத்­தில் நான்­கா­வது தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் குறித்த பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அப்­போது 154 மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்கு ஃபைசர் தடுப்­பூ­சி­யும் 120 தன்­னார்­வ­லர்­க­ளுக்கு மொடர்னா தடுப்­பூ­சி­யும் போடப்­பட்­டது.

தடுப்­பூ­சி­கள் பாது­காப்­பா­னது என்­றும் அது கணி­ச­மான ஆன்­டி­பா­டி­களை உரு­வாக்­கு­வ­தா­க­வும் முதல்­கட்ட முடி­வு­கள் கூறு­கின்­

றன.

ஆனால் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மிக்கு எதி­ராக அது ஓர­ளவு மட்­டுமே செயல்­தி­றன்­மிக்­க­தாக உள்­ளது என்று மருத்­து­வ­மனை வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம், "ஓமிக்­ரா­னைத் தவிர மற்ற உரு­மா­றிய கிரு­மி­களுக்கு எதி­ராக தடுப்­பூ­சி­கள் மிக­வும் செயல்­தி­றன்­மிக்­க­தாக உள்­ளது," என்­றார் ஆய்வை வழி­ந­டத்­திய பேரா­சி­ரி­யர் கிலி ரெகேவ்-யோச்சே.

"நான்­கா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் பலர் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­கி­னர்," என்­றார் அவர்.

எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு நான்­கா­வது தடுப்­பூசி போடு­வது நல்ல வி‌ஷ­யம்­தான். ஆனால் தற்­போது உள்­ள­தை­விட மேலும் வய­தா­ன­வர்­க­ளுக்கு நான்­கா­வது தடுப்­பூசி போடும் வகை­யில் திருத்­தம் கொண்­டு­வ­ர­லாம் என்­றார் அவர்.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு நான்­கா­வது தடுப்­பூசி போடத் தொடங்­கி­யது இஸ்­ரேல். இது­வரை 500,000 பேர் நான்­கா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள் இனி ‌ஏழு நாள்­க­ளுக்­குப் பதி­லாக ஐந்து நாள்­களே தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் இஸ்­ரேல் அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கொள்­ளை­நோயை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­பட வேண்­டும் என்று ஐநா தலை­வர் அன்­டோ­னியோ குட்டரெஸ் கேட்­டுக்­கொண்­டார்.

அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்றால், நாம் புதிய உருமாறிய கிருமிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.

2021ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 40 விழுக்காட்டினருக்கும் மற்றவர்களுக்கு இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள்ளும் தடுப்பூசி போடப்படும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியதையும் சுட்டிய அவர், அந்த இலக்கை எட்டும் தூரத்தில்கூட நாம் இன்னும் இல்லை என்றார்.

"ஆப்பிரிக்க நாடுகளைவிட பணக்கார நாடுகளின் தடுப்பூசி விகிதம் ‌‌ஏழு மடங்கு அதிகம் உள்ளது வெட்கக்கேடானது," என்றார் குட்டரெஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!