ஆர்டர்ன்: ஓமிக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் ஓமிக்­ரான் கிருமி வகை­யால் ஏற்­படும் பாதிப்பு உச்­சத்தை எட்டி குறை­யத் தொடங்­கி­ய­தும் கொவிட்-19 தடுப்­பூசி, சமூக இடை­வெளி விதி­மு­றை­கள் தளர்த்­தப்­படும் என்று அந்­

நாட்­டுப் பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டர்ன் உறுதி அளித்­துள்­ளார்.

கட்­டுப்­பா­டு­களை எதிர்த்து நாடா­ளு­மன்­றம் அருகே காவல்­

து­றை­யி­ன­ரு­டன் ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­கள் கைக­லப்­பில் ஈடு­பட்­டதை அடுத்து திரு­வாட்டி ஆர்­டர்ன்

இந்­தத் தக­வலை வெளி­யிட்­டார்.

கடந்த இரண்டு வாரங்­க­ளாக, தலை­ந­கர் வெலிங்­ட­னில் உள்ள நாடா­ளு­மன்­றக் கட்­டடத்­தின் அரு­கில் உள்ள சாலை­களை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முற்­று­கை­யிட்டு வரு­கின்­ற­னர்.

லாரி­கள், கார்­கள், மோட்­டார் சைக்­கிள்­கள் போன்ற வாக­னங்

­க­ளைப் பயன்­ப­டுத்தி சாலை மறி

­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தைக் கைவி­டும்­படி நியூ­சி­லாந்து அர­சாங்­கத்­துக்கு ஆர்ப்­பாட்­டக்­

கா­ரர்­கள் நெருக்­கு­த­லைத் தரு­கின்­ற­னர். நியூ­சி­லாந்­தில் ஓமிக்­ரான் கிருமி வகை மார்ச் மாத நடுப்­

ப­கு­தி­யி­லி­ருந்து இறுதிக்­குள் உச்­சத்தை எட்டி, அதன் பிறகு குறை­யத் தொடங்­கும் என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

அதன் பிறகு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­கான தேவை குறை­யும் என்­றும் அது­தொ­டர்­பான விதி­மு­றை­யில் மாற்­றம் கொண்­டு­வ­ரப்­படும் என்­றும் திரு­வாட்டி ஆர்­டர்ன் கூறி­னார்.

"கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு இருந்த நிலைக்­குத் திரும்ப அனை­வ­ரும் விரும்­பு­ கி­றோம். நீங்கள் எதிர்­பார்ப்பதைவிட முன்­ன­தா­கவே, கூடிய விரை­வில் அந்த நாள் வரும்.

"ஆனால் நீங்­கள் வற்­பு­றுத்­து­வ­தால் அந்த நாள் வராது. நியூ­சி­லாந்து மக்­க­ளின் உயி­ருக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­ட­தும் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும்," என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளி­டம் திரு­வாட்டி

ஆர்­டர்ன் தெரி­வித்­தார்.

தடுப்­பூ­சித் திட்­டத்தை எதிர்த்து முத­லில் தொடங்­கிய ஆர்ப்­பாட்­டம் பிறகு திரு­வாட்டி ஆர்­டர்­னுக்­கும் அவ­ரது அர­சாங்­கத்­துக்­கும் எதி­ரா­ன­தாக உரு­மா­றி­யது.

முறை­யற்ற, ஏற்­றுக்­கொள்ள முடி­யாத வகை­யில் நடந்­து­கொண்­ட­தற்­கா­க­வும் பொது இடத்­தில் இடை­யூறு விளை­வித்­த­தற்­கா­க­வும் நேற்று எட்டு பேரை நியூ­சி­லாந்து காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். காவல்­துறை அதி­கா­ரி­கள் சிலர் மீது மனிதக் கழிவு வீசப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நியூசிலாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறத்தாழ 16,000ஆகப் பதிவாகி உள்ளது. கொவிட்-19 காரணமாக அந்நாட்டில் இதுவரை 53 பேர் மாண்டுவிட்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்களில் 94 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!