குரங்கம்மை தொற்று 5,000ஐ தாண்டியது

ஜெனிவா: உல­கம் முழு­வ­தும் இவ்­வாண்டு இது­வரை 5,322 பேரி­டம் குரங்­கம்மை தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது குறித்து தன்­னி­டம் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் கூறி­யுள்­ளது. குரங்­கம்மை தொற்­றில் 85 விழுக்­காடு ஐரோப்­பா­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

தொற்று வேக­மாக அதி­க­ரித்­தா­லும், உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அவ­ச­ர­கால குழு இரண்­டா­வது முறை­யாக சந்­திப்பு நடத்த இன்­னும் தேதி நிர்­ண­யிக்­க­வில்லை.

எட்டு நாள்­களில் குரங்­கம்மை தொற்று 56 விழுக்­காடு கூடி­யுள்­ளது. தற்­போது 53 நாடு­களில் குரங்­கம்மை தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மேற்கு, மத்­திய ஆப்­பி­ரிக்க நாடு­களில் குரங்­கம்மை நீண்­ட­கா­ல­மா­கவே நிரந்­தர நோயாக இருந்து வந்­துள்­ளது. ஆனால், கடந்த மே மாதத் தொடக்­கத்­தி­லி­ருந்து மற்ற நாடு­க­ளி­லும் குரங்­கம்மை பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்டு வரு­கிறது.

"குரங்­கம்மை பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்த, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர் மீது கவ­னம் செலுத்­து­மாறு உலக நாடு­க­ளி­டம் சுகா­தார நிறு­வ­னம் தொடர்ந்து கேட்டுக்­கொள்­கிறது," என்­றார் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் ஃபடிலா சாயிப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!