எங்கள் ராணுவம் சும்மா இருக்காது: எச்சரிக்கும் சீனா

பெலோசியின் தைவான் பயணம் குறித்த பேச்சால் சீனா கடுஞ்சினம்

பெய்­ஜிங்: தைவானுக்குப் பய­ணம் செய்வது குறித்து அமெ­ரிக்கா உறுதி­யாக இருந்­தால், தமது ராணு­வம் ஒன்­றும் சும்மா இருக்­காது என்று சீனா எச்சரித்துள்ளது.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் நேன்சி பெலோசி தைவா­னுக்­குப் பய­ணம் செய்­யக்­கூ­டும் என்ற பேச்சு தொடங்­கி­ய­தில் இருந்து, கடும் சினங்­கொண்­டுள்ள சீனா, அமெ­ரிக்­கா­வைத் தொடர்ந்து எச்­ச­ரித்து வரு­கிறது.

இந்தப் பயணத்தைத் தைவா­னுக்­கும் அமெ­ரிக்­கா­விற்­கும் இடை­யி­லான அர­ச­தந்­திர உறவை ஏற்படுத்துவதற்கான முயற்­சி­யாக சீன அதி­கா­ரி­கள் சிலர் கரு­து­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், சீன வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் ஜாவ் லிஜி­யன், "பெலோசி தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டால், சீனா உறு­தி­யான, கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்.

"இத­னால் ஏற்­படும் அனைத்து விளை­வு­க­ளுக்கும் அமெ­ரிக்­காவே முழு பொறுப்­பு ஏற்கவேண்டும்," என்று எச்­ச­ரித்­தார்.

சீன ராணு­வத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கர்­னல் டான் கெஃபி, "தைவா­னுக்­குச் செல்­வது குறித்து அமெ­ரிக்கா உறு­தி­யாக இருந்­தால், சீன ராணு­வம் ஒன்றும் சும்மா இருக்­காது.

"தைவான் விவ­கா­ரத்­தில், வெளி­நாடுகளின் தலையீட்டையும் அவற்றின் பிரி­வி­னை­வாத முயற்­சி­களையும் முறி­ய­டிப்­ப­தற்கு ராணு­வம் வலு­வான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்," என்று தெரி­வித்­ததாக பிபிசி செய்தி சொன்னது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கும் இன்று தொலை­பே­சி­யில் பேச­வுள்­ள­தாக அது பற்றி நன்கு அறிந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்த உரை­யா­ட­லின்­போது தைவான் விவ­கா­ரம், ர‌ஷ்­யப் படை­யெ­டுப்பு, பொரு­ளி­யல் விவ­கா­ரம் ஆகி­ய­வை குறித்து பேசப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் போட்­டி­யைச் சமா­ளிப்­பது குறித்­தும் பேசப்­படும் என்று வெள்ளை மாளி­கை­யின் தேசிய பாது­காப்பு செய்­தித் தொடர்­பா­ளர் ஜான் கிர்பி தெரி­வித்­தார். ஆனால், வரி குறித்து பேசு­வ­தற்­கான வாய்ப்பு குறைவு என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!