‘பெலோசியின் பயணம் தேவையற்றது’

பெய்­ஜிங்: அமெ­ரிக்கா நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் நேன்சி பெலோ­சி­யின் தைவான் பய­ணத்­தைக் கண்­டிக்­கும் வகை­யில் சீனா­வுக்­கான அமெ­ரிக்­கத் தூத­ரை அழைத்து எச்சரித்தது சீனா.

அமெ­ரிக்­கத் தூதர் நிக்­க­லஸ் பர்ன்ஸ் உட­னான சந்­திப்­பின்­போது சீனா­வின் துணை வெளி­யு­றவு அமைச்­சர் ஸி ஃபெங் பெலோ­சி­யின் தைவான் வரு­கைக்­குக் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தார்.

"இது மிக­வும் மோச­மான செயல் என்­றும் இதற்­கான விளை­வு­கள் மிகக் கடு­மை­யா­ன­தாக இருக்­கும்," என ஸி சொன்­ன­தாக சீன ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தனது தவ­று­க­ளுக்கு அமெ­ரிக்கா உரிய விலை கொடுக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­று அவர் சொன்னார்.

"தன் தவ­று­களை அமெ­ரிக்கா உட­ன­டி­யாக சரி­செய்ய வேண்­டும்.

"அத்­து­டன் பெலோ­சி­யின் தைவான் வரு­கை­யால் ஏற்­பட்ட பாத­க­மான விளை­வு­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கா மேற்­கொள்­ள­வேண்­டும்," என்­றும் ஸி சொன்­ன­தாக சின்­ஹுவா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பெலோ­சி­யின் தைவான் பய­ணம் தேவை­யற்­றது என்­றும் இந்­தப் பய­ணத்­தால் வெளி­யு­ற­வுக் கொள்கை நோக்­கம் எது­வும் நிறை­வே­ற­வில்லை என்றும் சிங்­கப்­பூ­ரில் உள்ள அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரிய­ரான வாங் கங்வு, "இந்­தப் பய­ணம் தேவை­யற்­றது," என்று தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார்.

"இந்­தப் பய­ணம் சரி­யான நேரத்­தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

"வட்­டா­ரத்­தில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­கான வழி இது­வல்ல," என்­றார் அவர்.

முன்­னாள் மூத்த தூதர் பில­ஹரி கௌசி­கன், "பெலோ­சி­யின் தைவான் பய­ணம் உண்­மை­யில் பதற்­றத்­தை­யும் அவ­நம்­பிக்­கை­யை­யும் மட்­டுமே அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

"இத­னால், அமெ­ரிக்கா-சீனா இடையே நில­வும் போட்­டித்­தன்மை வரும் மாதங்­களில் மேலும் மோச­மடை­யக்­கூ­டும்," என்­றார் அவர்.

சீனா-அமெ­ரிக்கா இடை­யி­லான வர்த்­த­கப் போர் ‌சூழல், சீனா மீதான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டு ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் பெலோ­சி­யின் இந்­தப் பய­ணம் இரு­நாட்டு உறவை மேலும் மோச­மாக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!