அமெரிக்கா: கொவிட்-19 தொற்றினால் இனி தனிமைப்படுத்த தேவையில்லை

வாஷிங்­டன்: பெரி­ய­வர்­க­ளை­யும் குழந்­தை­க­ளை­யும் கொவிட்-19 கிருமி தொற்­றும் பட்­சத்­தில் இனி அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யில்லை என்று அமெ­ரிக்க நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்­றுக்கு ஆளான குழந்­தை­கள், பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­றால் மட்­டுமே வகுப்­பறைக்கு அல்­லது குழந்­தைப் பரா­மரிப்பு மையங்­க­ளுக்­குத் திரும்ப முடி­யும் என்ற விதிமு­றை­யை­யும் அம்­மை­யம் மீட்­டுக்­கொண்­டது.

"பள்­ளி­கள் கிரு­மிப்­ப­ர­வல் அபா­யம் தொடர்­பான இடர் மதிப்­பீட்டை மேற்­கொள்­வ­தை­யும் தங்­கள் பணி­யா­ளர்­க­ளை­யும் மாண­வர்­க­ளை­யும் பாது­காக்க போது­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தை­யும் இந்­தத் தளர்­வு­கள் எளி­தாக்­கும்," என்று அம்­மை­யத்­தின் நோய்த்­தொற்­றி­யல், தடுப்­புப் பிரி­வின் தலை­வர் கிரேட்டா மஸெட்டி கூறி­னார்.

அத்­து­டன், பணி­யி­டங்­களில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும் விதி­யி­லும் அது மாற்­றம் செய்­துள்­ளது.

முன்­ன­தாக, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோரை மட்­டுமே பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தும்­படி அது பரிந்­து­ரைத்து வந்­தது.

இந்­நி­லை­யில், பணி­யி­டங்­களில் பரி­சோ­தனை நடை­முறை நடப்­பில் இருந்­தால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், போடா­தோர் என்ற பாகு­பா­டின்றி, அனை­வ­ரை­யும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு இப்­போது அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 தொற்­றி­ய­தன் அல்­லது தடுப்­பூசி மூலம் மக்­கள்­தொகை­யில் 95 விழுக்­காட்­டி­னர் பாது­காப்பு பெற்­றுள்­ள­தா­கத் தர­வு­கள் காட்­டு­வதை அடுத்து, இந்த மாற்­றங்­கள் இடம்­பெ­று­வ­தாக டாக்­டர் மஸெட்டி குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்­றி­ய­வர்­கள் உட்­பு­றங்­களில் இருக்­கும்­போது முகக்­க­வ­சம் அணி­யு­மா­றும் அறி­கு­றி­கள் ஏதே­னும் தெரி­கின்­ற­னவா என்று பத்து நாள்­க­ளுக்­குக் கண்­கா­ணிக்­கு­மா­றும் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அத்­து­டன், கொரோனா தொற்­றி­ய­பின் ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு அல்­லது அறி­கு­றி­கள் தெரிந்­த­வு­டன் பரி­சோ­தனை செய்­து­கொள்ளு­மா­றும் அம்­மை­யம் அறி­வு­றுத்தி இருக்­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், போடா­தோர் என அனை­வ­ருக்­கும் இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் பொருந்­தும்.

இரண்டு வய­திற்­குட்­பட்ட குழந்­தை­க­ளுக்கு முகக்­க­வ­சம் அணி­விக்க வேண்­டாம் என்று அந்த மை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!