புதிய தடைகளால் ரஷ்யாவிற்கு பாதிப்பிராது

மாஸ்கோ: தனது ஆக்­கி­ர­மிப்­பின்­கீழ் இருந்த நான்கு உக்­ரே­னி­யப் பகு­தி­களை ரஷ்யா தன்­னு­டன் இணைத்­துக்­கொண்­ட­தாக அறி­வித்­ததை அடுத்து, அமெ­ரிக்கா அந்­நாட்­டின்­மீது புதிய தடை­களை விதித்­துள்­ளது.

ஆனா­லும், எண்­ணெய், எரி­வாயு மூல­மாக ரஷ்யா வரு­வாய் ஈட்டி வரு­வ­தால், அமெ­ரிக்­கா­வின் புதிய தடை­கள் நடை­மு­றை­யில் ரஷ்­யப் பொரு­ளி­யல்­மீது மிகக் குறைந்த தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

ரஷ்­யா­வு­டன் இணைக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அர­சி­யல், பொரு­ளி­யல் ஆத­ரவு வழங்­கு­வது பற்றி அல்­லது ரஷ்­யா­வின் இணைப்பு நட­வ­டிக்­கையை நியா­யப்­ப­டுத்தி, தற்­காக்க நினைக்­கும் நாடு­கள்­

மீ­தும் அமெ­ரிக்கா பொரு­ளி­யல் தடை­களை விதிக்­கும் என்று அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சல்­லி­வன் எச்­ச­ரிக்கை விடுத்­து இருக்கிறார்.

ஆனால், ரஷ்­யாவை மேலும் தனி­மைப்­ப­டுத்த இப்­படி ரஷ்ய ஆத­ரவு நிலைப்­பாட்டை எடுக்­கும் நாடு­களுக்­குத் தடை­கள் விதிப்­ப­தாக எச்­ச­ரிக்கை விடுத்­தால் மட்­டும் போதாது என்­றும் அது­பற்றி தீவி­ர­மா­கச் சிந்­திக்க வேண்­டும் என்­றும் அமெ­ரிக்க முன்­னாள் நிதி­ய­மைச்சு அதி­காரி டேனி­யல் டேன­பாம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

முன்­ன­தாக, உக்­ரே­னின் இறை­யாண்­மைக்கு உட்­பட்ட பகு­தி­களை ரஷ்யா தன்­னு­டன் இணைத்­துக்­கொண்­டதை ஒரு­போ­தும் அங்­கீ­

க­ரிக்க மாட்­டோம் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உறு­தி­ப­டத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் புதிய தடை­கள் ஏற்­கெ­னவே வலு­வி­ழந்­துள்ள ரஷ்ய ராணு­வத் தொழில்­து­றையை மேலும் வலு­விழக்­கச் செய்­யும் என்­றும் ரஷ்­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைத் தடுக்­கும் வகை­யில் அதன் நிதிக் கட்­ட­மைப்­பைக் குறி­வைத்து அத்­த­டை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அமெ­ரிக்க நிதி­ய­மைச்­சர் ஜேனட் யெலன் கூறி­யுள்­ளார்.

அதே வேளை­யில், மற்ற நாடு­கள் ரஷ்­யா­வி­டம் இருந்து எண்­ணெய்­யை­யும் எரி­பொ­ரு­ளை­யும் வாங்­கு­வ­தைத் தடுக்க மாட்­டோம் என்று அமெ­ரிக்க நிதி­ய­மைச்சு கூறி­யுள்­ளது. இதனை அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை­களில் காணப்­படும் பல­வீ­ன­மாக விமர்­ச­கர்­கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"தடை­களில் காணப்­படும் முரண்­பாடு இது," என்று குடி­யரசுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரான செனட்­டர் பில் கேசிடி குறிப்­பிட்­டார்.

"அனைத்­து­லக அள­வில் எண்­ணெய் விலை உயர்ந்­து­விட்ட நிலை­யில், எண்­ணெய்­யை­யும் இயற்கை எரி­வா­யு­வை­யும் விற்று ரஷ்யா பெரும்­ப­ணம் ஈட்டி வரு­கிறது," என்­றார் திரு கேசிடி.

உக்­ரே­னுக்கு மேலும் உதவி

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு மேலும் 12.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$17.6 பி.) மதிப்­பி­லான உத­வி­களை வழங்க அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. ரஷ்­யா­வு­டன் போரிட்டு வரும் உக்­ரே­னுக்கு இவ்­வாண்­டில் இதற்­கு­முன் 54 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் உதவி வழங்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், உக்­ரே­னுக்கு மேலும் 530 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$759 மி.) மதிப்­பு­டைய நிதி­யு­த­வியை வழங்­கு­வ­தாக உலக வங்கி அறி­வித்­துள்­ளது.

உக்­ரேன்­மீது ரஷ்யா படை­

யெ­டுக்­கத் தொடங்­கி­ய­து­மு­தல் இது­வரை உக்­ரே­னுக்கு 13 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் வழங்­கி­யுள்­ளது உலக வங்கி.

இந்த நிதியுதவிக்கு பிரிட்டனும் (US$500 மி.) டென்மார்க்கும் (US$30 மி.) பங்களித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!