கிரைமியா பாலம் வெடிப்பு: எட்டு பேர் கைது

கிரைமியா பாலம் வெடிப்பு: எட்டு பேர் கைது

1 mins read
2cd3fc2a-3333-4aab-8dff-6fd95734c044
கிழக்கு உக்ரேனின் அவ்டிவ்கா நகரில் உள்ள சந்தையின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது எழுவர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: கிரை­மியா பகு­தி­யை­யும் ரஷ்­யா­வை­யும் இணைக்­கும் கெர்க் பாலத்­தைத் தாக்­கி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் எட்டு பேரைக் கைது­செய்­துள்­ள­தாக ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. ஐந்து ரஷ்­யர்­களும் மூன்று உக்­ரே­னிய குடி­மக்­களும் கைது­செய்­யப்­பட்­ட­னர். தாக்­கு­த­லுக்­குப் பின்­னால் உக்­ரே­னின் திட்­டம் இருப்­ப­தாக ரஷ்யா கூறுகிறது.

அதைத் தொடர்ந்து கிழக்கு உக்­ரே­னின் டொனி­யெட்ஸ்க் வட்­டா­ரத்­தில் இருக்­கும் சந்தை மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லில் குறைந்­தது எழுவர் மாண்­ட­னர். மேலும் எட்டு பேரா­வது காய­மடைந்­த­தா­க­வும் டொனி­யெட்ஸ் ராணு­வத் தலை­வர் பாவ்லோ கைரி­லெங்கோ தெரி­வித்­தார்.

இந்­தத் தாக்­கு­தல் சந்­தைக்கு அதி­க­மா­னோர் வந்து செல்­லும் நேரத்­தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், உக்­ரேன் மீதுள்ள அன்பை ஆயு­தங்­களை வழங்கி வெளிப்­ப­டுத்­து­மாறு அந்­நாட்­டின் தற்­காப்பு அமைச்சு பிரான்­சுக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. அதைச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் உக்­ரே­னின் தற்­காப்பு அமைச்சு சமூக வலைத்­த­ளங்­களில் காணொளி ஒன்­றைப் பதி­வே­ற்­றம் செய்­தது.

பாரிஸ் போது­மான உதவி வழங்­க­வில்லை என்ற குறை­கூறலுக்கு மத்­தி­யில் இந்­நடவடிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதற்­கி­டையே, அடுத்த மாதம் 18, 19ஆம் தேதிகளில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஏபெக் எனும் ஆசிய பசிபிக் பொருளியல் அமைப்பின் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.