பாகிஸ்தானுக்கு நிதியுதவி இல்லை

பாகிஸ்தானுக்கு நிதியுதவி இல்லை

1 mins read
3c4e1cc0-ef6c-4d23-bf09-5cb94923bd59
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தான் நிதி­உ­தவி பெற அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­கும் அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­துக்­கும் இடையே நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை எதிர்பார்த்த வண்ணம் போக­வில்லை. அத­னால் நிதியுதவிடத் திட்டம் வரையப்படவில்லை.

பாகிஸ்­தான் மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கிறது. அனைத்­து­ல­கப் பண நிதி­யம் நிதி­யு­தவி வழங்­கி­யி­ருந்­தால் அது நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­கக் கைகொ­டுத்­திருக்கும்.

பேச்­சு­வார்த்தை நடத்த நிதி­யத்­தின் அதி­கா­ரி­கள் சென்ற வாரம் பாகிஸ்­தான் சென்­றி­ருந்­த­னர். பேச்­சு­வார்த்தை எதிர்­பார்த்­த­படி போகாத நிலை­யில் அவர்­கள் அந்­நாட்­டி­லி­ருந்து புறப்­பட்டுள்ளனர்.

மெய்நிகரில் பேச்சுவார்த்தை தொடரும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்­தான் பல நாடு­க­ளி­டம் கடன்­பட்­டுள்­ளது. அதன் அர­சி­யல் சூழ­லும் களே­ப­ர­மாக உள்­ளது. இந்­நி­லை­யில் அதன் பொரு­ளி­யல் சீர்குலைந்துபோகும் நிலையில் உள்ளது.

பாகிஸ்­தா­னில் பண­வீக்­கம் பெரி­தும் மோச­ம­டைந்­துள்­ளது. பாகிஸ்­தான் நாண­யத்­தின் மதிப்­பும் சரிந்­துள்­ளது. இறக்­கு­ம­திப் பொருள்­க­ளுக்­குக் கட்­ட­ணம் செலுத்த முடி­யாத நிலை­யில் நாடு இருக்­கிறது.

அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தி­ட­மி­ருந்து பாகிஸ்­தான் 1.2 பில்­லி­யன் டாலர் (1.6 பில்­லி­யன் வெள்ளி) நிதி­யு­த­விப் பெறத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

எனி­னும், அதற்­கான நிபந்­த­னை­கள் கற்­பனைக்­கும் அப்பாற்பட்டவை என்று பாகிஸ்­தான் பிர­த­மர் ஷெபாஸ் ஷரிஃப் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார்.