தெற்கு பிலிப்பீன்ஸை புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்

மணிலா: ஜெலாவத் புயல் தாக்கியதில் பிலிப்பீன்ஸில் ஒருவரைக் காணவில்லை, பல்லாயிரம் பேர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு ஓடினர். தென்பகுதி பெருந்தீவான மிண்டானோவை புயல் சுழற்றித் தாக்கியதில் பெருவெள்ளம் ஏற்பட்டதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை புயல் பலவீனமடைந்தபோதிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கான அபாயம் நீடிப்பதாக வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று அப்பகுதியில் உள்ள மீட்பு செயலாண்மைகள் கூறினர். ஆனால், மிண்டாநௌவின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையிலிருந்து 11,729 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக நிலச்சரிவுக்கு முன்னதாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அபாயங்கள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம், மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்கள் இடம்பெறுவது இயல்பு என்று சமீபத்திய புயல் புல்லட்டின் கூறியது.

அபாயங்கள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம், மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்கள் இடம்பெறுவது  இயல்பு என்று சமீபத்திய புயல் நிலவரம் தொடர்பான ஆக அண்மைய அறிக்கை கூறியது.

புயல் வரும் பாதையில் அல்லது அதற்கு அருகாமையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் கிட்டத்தட்ட 5,000 பேர் தங்குமிடம் தேடிக்கொண்டிருந்தனர்.சிலர் படகோட்டம் தடைசெய்யப்பட்ட துறைமுகங்களில் சிக்கிகொண்டனர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்களும் சூறாவளிகளும் நாட்டையோ அல்லது அதன் சுற்றியுள்ள நீரையோ தாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று, நாட்டில் அதிக சேதம் படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!