பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடிய முன்னாள் ஜப்பானிய ராணுவ வீராங்கனைக்கு விருது

தோக்கியோ: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடி அதில் வெற்றி பெற்ற முன்னாள் ஜப்பானிய ராணுவ வீராங்கனையைக் கௌரவிக்கும் வகையில் அமெரிக்கா அவருக்கு விருது வழங்க இருக்கிறது.

24 வயது திருவாட்டி ரீனா கொனோய்க்கு அனைத்துலக வீராங்கனையர் விருது வழங்கப்படும் என்று மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

மார் 4ஆம் தேதியன்று இந்த விருதை உலகளாவிய நிலையில் 12 பெண்கள் பெறுகின்றனர் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான், பெலரூஸ், ஈரான், கியூபா ஆகிய நாடுகளைச் சென்ற பெண்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதில் சிக்கிப் பாதிப்படைந்த திருவாட்டி கொனோயை ஜப்பானின் சுய தற்காப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

அதையடுத்து, திருவாட்டி கொனோய் அந்தப் படையில் இணைந்தார்.

2021ஆம் ஆண்டில் அவருடன் பணிபுரிந்த மூன்று ஆடவர்கள் அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.

இதுகுறித்து திருவாட்டி கொனோய் புகார் அளித்தார்.

ஆனால் ஜப்பானிய ராணுவம் அவர் அளித்த புகாரை அலட்சியப்படுத்தியதை அடுத்து, திருவாட்டி கொனோய் பதவி விலகினார்.

தமக்கு நேர்ந்த கொடுமையை அவர் பகிரங்கப்படுத்தினார். இதையடுத்து, ஜப்பானிய ராணுவம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, ஜப்பானிய ராணுவத்திலும் ராணுவம் தொடர்பான அமைப்புகளிலும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதன் விளைவாக, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 1,400க்கும் அதிகமான புகார்கள் செய்யப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

திரு கொனோயைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மூவர் குற்றவாளிகள் என்று 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பானிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!