You are here

உல‌க‌ம்

அன்வார் போட்டியிட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் விலகல்

கெஅடிலான் ராக்யாட் கட்சித் (பிகேஆர்) தலைவராகத் தேர்ந்- தெடுக்கப் பட்டிருக்கும் திரு அன்வார் இப்ராஹிம் நாடாளு- மன்றம் திரும்ப நோக்கம் கொண்டு இருக்கும் வேளையில் அவர் எந்தத் தொகுதியில் போட்டி- யிடு வார் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. மலேசியாவின் போர்ட் டிக்- சனில் நடைபெறவிருக்கும் இடைத் தேர் தலில் அவர் போட்டி யிடவுள் ளார். அவர் போட்டியிடு வதற்கு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள போர்ட் டிக் சன் நாடாளு மன்றத் தொகுதி காலி செய்து கொடுக் கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியா னது.

ரத்தான திட்டங்கள்: அன்வார் முதலீட்டாளர்களுக்கு மறுஉறுதி

ஹாங்காங்: அண்மையில் மலேசியா வால் ரத்து செய்யப்பட்ட பெருந் திட்டங்கள் பற்றிய கவலையில் இருந்த வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு மலேசியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளரான திரு அன்வார் இப்ராஹிம் மறுஉறுதி அளித்திருக்கிறார். முந்தைய நஜிப் அரசால் அனுமதிக்கப்பட்ட, தெளிவற்ற சில குறிப்பிட்ட திட்டங்களை மட்டுமே அரசு மறுஆய்வு செய்வதாகவும் சீனாவை மட்டந்தட்டும் செயலாக அதைக் கருத வேண்டாம் என்றும் திரு அன்வார் குறிப்பிட்டு இருக்கிறார்.

வர்த்தகப் போரால் சீனாவில் வேலையின்மை பெருகக்கூடும்

ஹனோய்: சில நாடுகளின் தன்னைப்பேணித்தனம் உலகப் பொருளியல் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நேற்று வியட்நாமில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கில் சீனா தெரிவித்தது. சீனாவிலிருந்து அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்போவதாகக் கடந்த வாரம் அமெரிக்கா அச்சுறுத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியது. அதிபர் டிரம்பின் பெயரையோ அமெரிக்காவின் பெயரையோ குறிப்பிடாமல் சீனாவின் துணை அதிபர் ஹு சுன்ஹுவா சீனாவின் கருத்தை கருத்தரங்கில் வெளி யிட்டார்.

சூறாவளி தாக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது அமெரிக்கா

கெரோலைன: அமெரிக்காவின் தென் கெரோலைனவை சூறாவளி தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக கரையோரங் களில் வாழும் கிட்டத்தட்ட ஒரு மில்லி யன் மக்களை வெளியேறுமாறு அதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர். ‘ஃபுளோரன்ஸ்’ என்ற அந்த சூறாவளி மணிக்கு 220 கிலோ மிட்டர் வேகத்தில் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபுளோரன்ஸ் சூறாவளி காரண மாக முன் எப்போதும் இல்லாத அளவி ற்கு இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. கடும் காற்று வீசுவதுடன் கடும் மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்குகளும் ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்தல்

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்கள் போர் குற்றங்கள் புரிந்த தாக கூறி அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களைத் துன்புறுத் தி யதன் தொடர்பில் அமெரிக்க ராணுவ வீரர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நீதிமன்றம் எண்ணம் கொண்டுள்ளது. நீதிமன்றத்தின் யோசனை அமெரிக்க இறையாண்மைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் மிரட்டல் என அமெரிக்க வெள்ளை மாளி கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவி த்துள்ளார்.

சாபா மாநிலத்தில் இரு இந்தோனீசிய மீனவர்கள் கடத்தல்

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் இந் தோனீசியாவைச் சேர்ந்த இரு மீன வர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். செம்பொர்னா நகருக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆயுதம் ஏந்திய ஆடவர்கள் அவர்களைக் கடத்தி யதாகத் தகவல் வெளியானது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் நான்கு பேர் இருந்த தாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவி த்தது. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்ற ஒருவர் காவல்துறையிடம் சம்பவம் குறித்து தகவல் அளித்து உள்ளார். ஆள்கடத்தலுக்கு முன்னதாகப் படகின் இயந்திரம் செயலிழக்கச் செய் யப்பட்டதாகவும் மின்சாரம் துண்டிக்கப்ப ட்டதாகவும் அவர் கூறினார்.

92 சிறை கைதிகள் தப்பி ஓட்டம்

சாவ் பாலோ: பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது நேற்று முன்தினம் அதிகாலையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் சிறைச்சாலைக் குள் புகுந்த கும்பல் போலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்று 92 கைதிகளைத் தப்பிக்க வைத்தனர். பிரேசிலின் வடகிழக்குப் பகுதி யில் ரொமேயூ கோன்கால்வ்ஸ் அப்ரான் டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பலதரப்பட்ட குற்றங் கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளன ர்.

$138 மில்லியன் நன்கொடைக்கான ஆதாரங்களை வெளியிட்ட நஜிப்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய $138 மில்லியன், சவூதி அரேபிய அரச குடும்பத்தின் நன்கொடை என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நன்கொடை குறித்த தகவலை வால் ஸ்திரீட் நாளிதழ் வெளியிட்டிருந்தது. 1எம்டிபி ஊழலை விசாரிக்கும் அதிகாரிகள், திரு நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அந்த பெருந்தொகை மாற்றிவிடப்பட்டதைக் கண்டறிந்ததாக அந்நாளிதழ் கூறியிருந்தது.

மலேசியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 2 பதின்ம வயதினர் பலி

அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் 17 வயது ஆண்கள் இருவர் மாண்டனர்.பாலம் இடிந்து விழுந்தபோது அவர்கள் ஒரு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. கெடாவின் தீ மற்றும் மீட்புப் பிரிவுக்கு இச்சம்பவம் குறித்து இரவு 10.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இடிபாடுகளின் அடியில் சிக்கியிருந்த இரு பதின்ம வயதினரையும் மீட்க 11 தீயணைப்பாளர்கள் அரும்பாடுபட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அந்த இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளத்தை போலிஸ் உறுதிப்படுத்தவில்லை.

‘ஜோகூர் அரச குடும்பத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை’

பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் அரசக் குடும்பத்தை மலேசிய அரசாங்கம் கண்காணிக்கவில்லை என்று அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜஸ்மான் தெரிவித்துள்ளார். மலேசிய அரசாங்கம் தன்னை யும் தமது குடும்பத்தையும் கண் காணித்து வருவதாக ஜோகூர் மாநிலத்தின் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராகிம் நேற்று குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் துணை அமைச்சர் அசிஸ் ஜஸ்மானின் கருத்து அமைந்தது. “எனக்குத் தெரிந்த வரை ஜோகூர் அரசக் குடும்பத் தினரைக் கண்காணிக்க பக்கத் தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைமையோ அல்லது அக்கூட்ட ணியில் உள்ள கட்சிகளோ உத்தர விடவில்லை.

Pages