உல‌க‌ம்

அம்மான்: தென்லெபனானில் இஸ்‌ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்பாங்: கேலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நியூயார்க்: லெபனானில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடியது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு அமெரிக்கச் செய்தியாளரான டேரி ஆண்டர்சனை இஸ்லாமியப் போராளிகள் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவர் 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.
கெய்ரோ: கிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டாம் ரேம்சிஸ் மன்னரின் சிலையை எகிப்து மீட்டுள்ளது. அந்த சிலை 3,400 ஆண்டு பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.