ரசிகரின் குழந்தையை முத்தமிட்டு ‘துருவன்’ என்று பெயரிட்ட விஜய் சேதுபதி

தமது ரசிகர் ஒருவரின் குழந்தையை முத்தமிட்டு ‘துருவன்’ என்று நடிகர் விஜய் சேதுபதி பெயரிட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘மாஸ்டர்’, தெலுங்கில் ‘உப்பெனா’ உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை செய்ததோடு பாராட்டுகளையும் குவித்தன.

மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, ‘மாமனிதன்’ படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. தற்போது, ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைக்கர்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதனிடையே, தமது தர்மபுரி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிலம்பு என்பவரின் கோரிக்கையை ஏற்று, அவரது ஆண் குழந்தைக்கு ‘துருவன்’ என்று பெயரிட்டுள்ளார் விஜய் சேதுபதி. குழந்தை துருவனை கொஞ்சி அதன் தலையில் விஜய் சேதுபதி முத்தமிடும் காணொளியும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!