அதிகமானோரை வரவேற்க காத்திருக்கும் உணவகங்கள்

மே 16ஆம் தேதி கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கெடுபிடியாக்கப்பட்ட பின்­னர் நாளை (ஜூலை 12) முதல் உண­வ­கங்­களில் ஐந்து பேர் குழு­வாக சென்று உண­வ­ருந்த முடியும்.

துவண்டு போய் இருந்த பல உண­வ­கங்­க­ளுக்கு புதிய தளர்­வு­கள் புத்­து­யிர் தரும் என்று பல கடைக்­கா­ரர்­கள் தமிழ் முர­சி­டம் நம்பிக்கையுடன் தெரி­வித்­த­னர்.

“வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இல்­லாதக் குறை­யால் கிரு­மித்­தொற்று தொடங்­கிய காலம் முதல் பல கடைகளில் வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்தது. கடு­மை­யான கட்­டு­ப்பா­டு­க­ளால் உள்­ளூர் மக்­கள் வருகையும் வற்றிப்போனது மற்­றோர் அடி,” என்­றார் காந்தி உண­வ­கத்­தின் நிர்­வாகி திரு ராஜ்­மோ­கன் பக்­கி­ரி­சாமி, 42.

உணவு விநி­யோ­கத்­தில் சிறி­து அ­ளவு வரு­மா­னம் கிடைத்தபோதும் மக்­கள் நேர­டி­யாக உண­வ­கத்­திற்கு வந்து சாப்­பி­டு­வ­தற்கு அது ஈடா­காது என்­றார் திரு ராஜ்­மோ­கன்.

“விசு­வா­ச­மான வாடிக்­கை­யா­ளர்­கள் நம் கடை­யைத் தேடி வந்து உண­வைக் கட்டி எடுத்து சென்­ற­னர். நம் கடை­யின் நீண்ட வர­லாற்­றால் அந்த அதிர்­‌ஷ்­டம் இருந்­தது. இருந்­தா­லும் நேர­டி­யாக வந்து சாப்­பி­டும் வாடிக்­கை­யா­ளர்­கள் மூலம் தான் நிறைவான வரு­மா­னம் ஈட்டு ­கி­றோம்,” என்­றார் ராஜ்­மோ­கன்.

புதுப்­பிப்புப் பணி­கள் முடிந்து கடந்த வாரம் முத்­துஸ் கறி உண­வகத்தில் அமர்ந்து உண­வ­ருந்­து­வது மீண்டும் தொடங்கியது.

“வழக்­க­நி­லை திரும்பு­வ­தற்கு இது ஓர் அறி­குறி. மறு­ப­டி­யும் குடும்­பத்தோடும் நண்­பர்­க­ளோடும் மக்­கள் குழுக்­களில் வந்து சாப்­பி­டு­வது மிகுந்த மகிழ்ச்சி தரு­கிறது,” என்­றார் முத்­துஸ் கறி நிர்­வா­கி­களில் ஒரு­வ­ரான திரு­மதி விஷாலி விஸ்­வ­னாத், 43.

கட்­டுப்­பா­ட்டு­த் தளர்வுகளால் வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்கை கணி­ச­மாக கூடு­ம் என எதிர்­பார்த்­தா­லும் அதற்­கு சிறப்பு ஏற்­பாடு எது­வும் தேவை­யில்லை என்று தமிழ் முர­சி­டம் பேசிய உரிமையாளர்கள் கூறி­னர்.

“இதை­விட பல மடங்கு பெரிய கூட்­டங்­க­ளைச் சமா­ளித்­துள்­ளோம். உண­வ­கத்­தில் மேசை, நாற்­காலி அமைப்­பு­களை ஐந்து பேர் குழுக்­ க­ளாக உட்­கா­ரு­ம் வகையில் பாது­காப்­பாக மாற்­றி­னால் போதும். மற்­ற­படி வழக்­கம்­போல இயங்­கு­வோம்.,” என்­றார் வி‌‌‌ஷாலி.

கிட்­டத்­தட்ட இரண்டு மாதம் நீடித்த கடு­ம் கட்­டுப்­பா­டு­களை வாய்ப்­பாக பயன்­ப­டுத்தி, முத்­துஸ் கறியைப் போல மேலும் சில உண­வ­கங்­கள் புது­ப்பிப்பை மேற்கொண்டன. பணி­கள் செய்­தன.

கடந்த 17 ஆண்டு கால­மாக ரேஸ் கோர்ஸ் சாலை­யில் இயங்கி வரும் காயத்­தி­ரி உண­வ­கத்­தின் சமை­ய­லறையில் முதல்முறை­யாக விரி­வான புது­ப்பிப்புப் பணி­கள் நடந்தன என்­றார் காயத்ரி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு சண்­மு­கம் கணே­சன், 58.

“வழக்­க­மான நேரத்­தில் பெரி­த­ள­வில் புதுப்­பிப்பு பணி­கள் செய்­வது சாத்­தி­யமே ஆகாது. சோத­னையை வாய்ப்­பாக மாற்ற நினைத்­தோம். துவாஸ் பகு­தி­யில் இருக்­கும் நம் மைய சமை­ய­லறை மூலம் உணவு விநி­யோ­கித்துக்கொண்டு, உண­வ­கத்தை மூடி புதுப்­பிப்பு பணி­கள் செய்­தோம். இத­னால் நவீன சாத­னங்­க­ளு­டன், அதிக சுகா­தா­ரத்­து­டன் உண­வ­கத்­தி­லேயே உண­வைத் தயா­ரிக்க முடி­யும்,” என்­றார் திரு சண்­மு­கம்.

சிங்­கப்­பூர் மக்­கள் தொகை­யில் 50% இருமுறை தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொண்­டால் எட்­டுப் பேராக அமர வாய்ப்பு வழங்­கப்­ப­ட­லாம் என்று அர­சாங்­கம் கூறியுள்ளது.

கொவிட்-19 நில­வ­ரம் சீராக இருந்­தால் கூடு­தல் தளர்­வு­களை இம்­மாத இறு­தி­யில் எதிர்­பார்க்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!