ஜப்பானில் மரண எண்ணிக்கை 5

தோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த 70களின் வயதில் உள்ள ஆடவர் ஒருவர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டுவிட்டதாக என்எச்கே தெரிவித்தது. ஜப்பானின் வாக்காயாமா பகுதியைச் சேர்ந்த அவரிடம் இம்மாதம் 13ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்தது. ஏற்கெனவே டயமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்த நான்கு ஜப்பானியர்கள் மாண்ட நிலையில் நேற்று இந்த மரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.