எட்டு பணியாளர்களுக்குத் தொற்று: சாங்கி விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை

சாங்கி விமான நிலையம் முனையம் 4ல் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளும் பணியாளர்கள். படம்: திமத்தி டேவிட்

சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு கொவிட்-19 சிறப்பு பரிசோதனை நடத்தப்படுகிறது. யாருக்காவது தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய 9,000 ஊழியர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

சாங்கி விமான நிலைய ஊழியர்கள் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக நேற்று (மே 9) தெரிவிக்கப்பட்டது.

அவர்களையும் சேர்ந்து விமான நிலைய ஊழியர்கள் மொத்தம் எட்டுப் பேர் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர் இரண்டு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

விமான நிலைய தொற்று குழுமத்தில் இடம்பெற்று இருப்போரில் நால்வர் முனையம் 3ன் முக்கிய துப்புரவு ஒப்பந்த நிறுவனமான ‘ராம்கி கிளீன்டெக் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஊழியர்கள் எட்டு பேருக்குத் தொற்று ஏற்பட்டுவிட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

சாங்கி விமான நிலைய முனையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் தெரிவித்துள்ளன.

முனையம் 3ன் தரைத்தளம் 2ல் செயல்படும் உணவு, பானக் கடைகளும் சில்லறை விற்பனைக் கடைகளும் அந்தத் தளமும் பொதுமக்களுக்கு மூடப்பட்டு இருக்கின்றன.

கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக அவற்றின் ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதனிடையே, கொவிட்-19 பரிசோதனை பற்றி இன்று (மே 10) காலைதான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக விமான நிலைய ஊழியர்களில் சிலர் கூறினர்.

முனையம் 4ல் அமைக்கப்பட்டு இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இன்று கட்டுமானத் துறை ஊழியர்களும் சிஸ்கோ பாதுகாப்பு காவலர்களும் வரிசைப்பிடித்து நின்றதைப் பார்க்க முடிந்தது.

முனையம் 3ல் இருந்து இடைவழிப் பேருந்திலும் பொதுப் பேருந்துகளிலும் கொவிட்-19 பரிசோதனைக்காக பலரும் வந்தனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட விமான நிலைய முன்களப் பணியாளர்கள் 28 நாட்களுக்கு ஒரு தடவை என்ற வழக்கமான பரிசோதனைச் செயல்திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்று இருக்கிறார்கள்.

இப்போது அவர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த ஊழியர்களில் 92 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்றாலும் இன்னமும் தொற்று ஆபத்து இருக்கிறது என்பதை சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் சுட்டிக்காட்டி உள்ளன.

சாங்கி விமான நிலையம்
கிருமித்தொற்று
பரிசோதனை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!