வேலையிடங்களில் செப்டம்பர் 8 முதல் சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை

வேலையிடங்களில் வரும் புதன்கிழமையிலிருந்து சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

ஊழியர்கள் அமர்ந்து உண்ணும் இடங்களில் அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைச் சரிவர பேணாததால் வேலையிடங்களில் அண்மையில் தொற்றுக் குழுமங்கள் கண்டறியப்பட்டதாக அமைச்சு இன்று கூறியது. எடுத்துக்காட்டாக, அத்தகைய சூழல்களில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் ஒருவரோடு ஒருவர் உரையாடினர்.

முன்னதாக, வேலையிடங்களுக்காக அறிவிக்கபட்டிருந்த நடைமுறைகள் மீட்டுக்கொள்ளப்படவில்லை என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெளிவுபடுத்தியுள்ளார்.

“வீட்டிலிருந்து பணிபுரிவோரில் 50 விழுக்காட்டினர் வேலையிடத்திற்குத் திரும்பலாம் என்ற வழிகாட்டி நெறிமுறையை நாங்கள் அறிவித்திருந்தோம். அதில் நாங்கள் மாற்றம் செய்யவில்லை,” என்றார் அவர்.

“ஆனால், வேலையிடத்தில் பணிபுரிவோர் வாரத்திற்கு ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்வதை உறுதிசெய்ய முதலாளிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைச் செய்ய, நிறுவனங்களுக்கு விரைவு பரிசோதனைக் கருவிகளை அரசாங்கம் விநியோகிக்கும். இரண்டு மாத காலத்திற்கு ஊழியர்கள் வாரந்தோறும் தங்களைப் பரிசோதனை செய்துகொள்ள இது வகைசெய்யும்.

ஒவ்வொரு ஊழியருக்கான எட்டு பரிசோதனைக் கருவிகளை நிறுவனத்திடம் வழங்கப்படும்.

வீட்டிலிருந்து வேலை
வேலையிடம்
சமூக ஒன்றுகூடல்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!