தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்டம்பர் 13 முதல் கட்டாய சுயபரிசோதனை முறை

தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) முதல் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளைக் கொண்டு தங்களை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே நடப்பில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனை முறைக்கு மேலாக இந்த சுயபரிசோதனை முறை கட்டாயமாக்கப்படுகிறது. அட்டவணைப்படுத்தப்பட்ட பரிசோதனையின்கீழ் ஊழியர்களுக்கு வாரத்திற்கு அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க பரிசோதனை மூலம் தொற்றுக்கு ஆளாவோரைக் கண்டறிவது தொடர்ந்து இன்றியமையாதது என்று மனிதவள அமைச்சு கூறியது.

புதிய நடைமுறையின்கீழ், ஏழு நாள்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பிசிஆர் தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள், அதிலிருந்து மூன்று நாள்கள் கழித்து ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

வெளிநாட்டு ஊழியர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!