கொவிட்-19 சூழல் பல வெளிநாட்டு ஊழியர்களை தவிக்கவிட்டது

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நியா­ய­மான கவ­லை­கள் பற்றி பேசு­வ­தற்­கும் வெளி­நாட்­ட­வர் சார்ந்த கோபங்­க­ளைக் குறைக்­க­வும் வேலை அனு­ம­தி­யில் உள்­ள­வர்­கள் பற்­றிய சங்­க­ட­மான பிரச்­சினை பற்றி தாம் பேச முடி­வெ­டுத்­த­தா­கப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

அப்­போ­து­தான் சிங்­கப்­பூர் தொடர்ந்து திறந்த சமூ­க­மா­கத் திகழ்ந்து தொடர்ந்து முன்­னேற முடி­யும் என்­றார் அவர்.

‘‘உண்மை என்­ன­வெ­னில் நாம் சிங்­கப்­பூ­ரில் உள்ள வெளி­நாட்­ட­வ­ரு­டன் மட்­டும் போட்­டி­யி­ட­வில்லை, உல­கில் உள்ள அனை­வ­ரு­ட­னும் போட்டி போடு­கின்­றோம். ‘எங்­கி­ருந்­தும் வேலை செய்­ய­லாம்’ என்­பது ‘வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் சூழ­லுக்கு’ அடுத்த கட்­டம் என்பதை கொவிட்-19 பல நிறு­வ­னங்­க­ளுக்கு உணர்த்தி உள்­ளது.’’

இங்­குள்ள வெளி­நாட்­ட­வர்­கள் நமது ஊழி­ய­ர­ணியை வலுப்­ப­டுத்­து­கின்­ற­னர். அவர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சக ஊழி­யர்­கள், அக்­கம்­பக்­கத்­தி­னர், நண்­பர்­கள் என்­றும் திரு லீ வலி­யு­றுத்­தி­னார்.

கொவிட்-19 சூழல் பல வெளி­நாட்டு ஊழி­யர்­களை தனிப்­பட்ட முறை­யில் பாதித்­துள்­ளது என்­றும் வெளி­நாட்­டில் உள்ள தங்­கள் குடும்­பத்­தை­விட்­டுப் பிரிந்து வாழும் அவர்­கள், தங்­கள் நாட்­டுக்­குத் திரும்­ப­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டது என்­பதையும் பிர­த­மர் நினைவுப்ப­டுத்­தி­னார்.

வெளி­நாட்­டி­ன­ரில் பலர் முன்களத்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் தோளுக்குத் தோளாக நின்று உழைத்­த­னர் என்­ப­தை­யும் அவர்­களும் சிங்­கப்­பூ­ருக்­குப் பங்­க­ளித்­துள்­ள­னர் என்­றும் அவர்­களை நாம் புறக்­க­ணித்து சிங்­கப்­பூர் வெளி­நாட்­ட­வர்க்கு விரோ­த­மான நாடு என்ற தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது என்­றும் திரு லீ கூறி­னார். மாறாக, சிங்­கப்­பூர் திறந்த பொரு­ளி­ய­லாக தொடர்­வதை உலக்­குக்­குக் காட்ட வேண்­டும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!