'பேக்ஸ்லோவிட்' மாத்திரைகளின் முதல் தொகுதி சிங்கப்பூர் வந்து சேர்ந்தது

கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்  'பேக்ஸ்லோவிட்' (Paxlovid) மாத்திரையின் முதல் தொகுதி கடந்த வாரத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ்

கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் 'பேக்ஸ்லோவிட்' (Paxlovid) மாத்திரையின் முதல் தொகுதி கடந்த வாரத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறது.

சுகாதார அமைச்சர் ஓங் யீங் காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதைத் தெரிவித்தார்.

ஃபைசர் நிறுவனம் 'பேக்ஸ்லோவிட்' மாத்திரையை உற்பத்தி செய்கிறது.

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைக்காக சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதித்துள்ள முதல் மாத்திரை இதுவாகும்.

கொவிட்-19 தொற்றால் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 'பேக்ஸ்லோவிட்' மாத்திரை எழுதித் தரப்படும் என்று திரு ஓங் கூறினார்.

பெருந்தொற்று சிறப்பு அனுமதி நடைமுறையின்கீழ் சுகாதார அறிவியல் ஆணையம் 'பேக்ஸ்லோவிட்' மாத்திரைக்கு பிப்ரவரி 3ஆம் தேதி அன்று வழங்கியது.

முதல் தொகுதி மாத்திரைகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) அன்று சிங்கப்பூர் வந்திறங்கியதாக ஃபைசர் நிறுவனம் கூறியது.

மிதமான கொவிட்-19 தொற்று கடுமையான நோயாக மாறக்கூடிய அபாயத்தில் உள்ள பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க 'பேக்ஸ்லோவிட்' மாத்திரை பயன்படும்.

மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதையும் மரணத்தையும் குறைப்பது இதன் நோக்கம்.

'பேக்ஸ்லோவிட்' மாத்திரையை ஐந்து நாள்களுக்கு, தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை கொவிட்-19 அறிகுறிகள் தொடங்கிய ஐந்து நாள்களுக்குள் முடிந்தவரை விரைவாக உட்கொள்ள வேண்டும்.

#கொவிட்-19 #covid-19 #சிங்கப்பூர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!