வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்காக்க ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்றும் அதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.


“எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும்.


“அந்த வகையில், ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும். தமிழக அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதின்மூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும்.


“புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.


“வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.


“புலம்பெயர் தமிழர்கள் ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லாத் தொலைபேசி வசதி மற்றும் வலைத்தளம், கைப்பேசி செயலி அமைத்துத் தரப்படும். அவர்களுக்குத் தனியாகச் சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.


“கல்வி, வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்று அங்கேயே நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ் மொழியினை கற்றிட ஏதுவாகவும், தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.


“பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி ‘புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக’ கொண்டாடப்படும்.


“வெளிநாட்டில் உள்ள தமிழர் நலன்பேண, புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக 6 கோடியே 40 லட்ச ரூபாய், அவர்களுக்கான நலத்திட்டங்களுக்காக 8 கோடியே 10 லட்ச ரூபாய் மற்றும் வெளிநாட்டில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்காக 5 கோடியே 50 லட்ச ரூபாய் என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!