சமய நல்லிணக்கத்திற்குச் சான்று; பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், கேரள மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு திருமண விழா நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதற்குமுன் கேட்டறிந்து இராத வகையில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல், இந்து சமயப்படி நிகழ்ந்த மணவிழா அரங்காக மாறியது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த செருவல்லி ஜமாத் பள்ளிவாசலே அந்த பெருமைக்குரிய இடம்.

காயாம்குளத்தைச் சேர்ந்த சரத் சசிக்கும் அஞ்சு அசோக் குமாருக்கும் நேற்று (ஜனவரி 19) அந்தப் பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றது. வேத, மந்திரங்கள் முழங்க மணமகள் அஞ்சுவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் மணமகன் சரத்.

திருமணத்திற்குப் பின் அப்பள்ளிவாசலின் தலைமை சமயப் போதகர் ரியாசுதீன் ஃபைஸியிடம் அவர்கள் ஆசி பெற்றனர்.

வீட்டிற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பொருட்களுடன் ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பத்து சவரன் நகையையும் மணமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது பள்ளிவாசல் குழு.

மணமகள் அஞ்சுவின் தந்தையார் 2018ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்தச் சூழலில், தன் மகளின் திருமணத்தை நடத்தித் தருமாறு அஞ்சுவின் தாயார் பிந்து கடந்த அக்டோபர் மாதம் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் உதவி கோரியிருந்தார்.

“அவரது விண்ணப்பத்தைக் குழு உறுப்பினர்களிடம் காட்டியபோது, திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய எல்லாரும் முன்வந்தனர். பிந்து, தம்முடைய மூன்று பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பள்ளிவாசல் வளாகத்திலேயே இந்து முறைப்படி அஞ்சுவின் திருமணத்தை நடத்துவது என நாங்கள் முடிவுசெய்தோம்,” என்றார் செருவல்லி முஸ்லிம் ஜமாத் குழுவின் தலைவர் நுஜுமுதீன் அலுமூட்டில்.

அந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த முதல் பெண் அஞ்சுதான் என்பது குறிப்பிடத்தக்கது. “எல்லாச் சமயங்களும் அன்பையும் ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை கொள்வதையுமே போதிக்கின்றன. அந்தப் பாடங்களே இந்தத் திருமணத்திற்கு இட்டுச் சென்றது,” என்றார் திரு நுஜுமுதீன்.

இந்நிகழ்வை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “அஞ்சு-சரத் திருமணம் கேரளாவில் நிலவும் ஒற்றுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. புதுமணத் தம்பதி, அவர்களின் குடும்பத்தினர், மசூதி நிர்வாகிகள், செரவல்லி மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#பள்ளிவாசலில்இந்துதிருமணம் #தமிழ்முரசு #அஞ்சுசரத் #செருவல்லி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!