இந்தியா: புதிய கொவிட்-19 சம்பவங்கள் பெருமளவு குறைந்தன

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,083 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து புதிய சம்பவங்கள் பெருமளவு குறைந்து காணப்படுவதாகக் கூறப்பட்டது.

குறிப்பாக நேற்று தமிழ்நாடு, புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

இம்மாதம் 17ஆம் தேதியன்று 97,894 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக குறைந்த எண்ணிக்கையில் புதிய சம்பவங்கள் பதிவாகி வருவதாக கூட்டரசு சுகாதாரச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டார்.

முதன்முறையாக அதே 24 மணிநேரத்தில் 100,000 பேர் குணமடைந்தோரின் பட்டியலில் சேர்ந்தனர். இதன்வழி நாட்டில் குணமடைவோர் விகிதம் 80.86% ஆனது. இதுவரை இந்தியாவில் சுமார் 4.5 மில்லியன் பேர் கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!