இந்தியாவில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகள் பற்றி தகவல் தளம் அமைக்கத் திட்டம்

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் வெளிநாட்டவர், மருத்துவமனைகளையும் அவற்றின் சிகிச்சைகளையும் பற்றி இன்னும் எளிதாகத் தெரிந்துகொள்ள விரைவில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை உயர்த்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.

மருத்துவப் பயணத் துறையில் இந்தியாவை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வருவதும் நோக்கம்.

அதன் பொருட்டு, இந்தியாவில் கிடைக்கும் மருத்துவச் சேவைகளைப் பற்றிய தகவல்கள் இடம்பெறும் இணையவாசலை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அதைத் தெரிவித்தது.

இந்திய மருத்துவமனைகள், அவை அளிக்கும் சிகிச்சைகள், அவற்றுக்கான கட்டணம் ஆகியவை பற்றிய தகவல்கள் இடம்பெறும்

அத்துடன், தங்குமிடங்கள் உள்ளிட்ட பயண ஏற்பாடுகளுக்கான தெரிவுகளும் அதில் உண்டு என அந்த அதிகாரி கூறினார்.

'இந்தியாவில் குணமடையுங்கள்' எனும் அந்தத் திட்டத்தை இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கி வருவதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் அது முடிவுபெறும் என்றும் அவர் சொன்னார்.

தகுதிபெற்ற மேற்கத்திய மருத்துவமனைகள், ஆயுர்வேத நிலையங்கள், நல்வாழ்வு நிலையங்கள் பற்றிய தகவல்களும் இணையவாசலில் இடம்பெறும் என்றார் அந்த அதிகாரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!