இந்தியா செல்லுமுன் பிசிஆர் பரிசோதனை தேவை இல்லை; தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டாம்

சிங்கப்பூர் உட்பட 82 நாடுகளிலிருந்து செல்வோருக்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்­கான கொவிட்-19 வழி­காட்டி நெறி­மு­றை­களை இந்­திய சுகா­தார அமைச்சு திருத்­தி­ய­மைத்­துள்­ளது.

அதன்­படி, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட 82 நாடு­களில் இருந்து செல்­வோர், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருப்­பின், இனி பய­ணத்­திற்­கு­முன் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ளத் தேவை­யில்லை. மாறாக, அவர்­கள் தங்­க­ளது தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழைப் பதி­வேற்­றம் செய்­தால் போது­மா­னது. இரு­த­ரப்பு உடன்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இந்த ஏற்பாடு இடம்­பெ­று­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து, கனடா, ஹாங்­காங், மாலத்­தீ­வு­கள், கத்­தார், நெதர்­லாந்து, சுவிட்­சர்­லாந்து ஆகி­ய­வை­யும் அந்த 82 நாடு­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.

சீனா­வும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு­களும் அதில் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அந்த 82 நாடு­களின் பட்­டி­யலை இந்­திய சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் (https://www.mohfw.gov.in) பார்க்­க­லாம்.

வெளி­நாட்­டில் இருந்து இந்­தியா செல்­வோர் இனி­மேல் தங்­க­ளது வீட்­டி­லேயே ஏழு நாள்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­ இல்லை. அத்­து­டன், எட்­டாம் நாளில் மீண்­டும் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­ய­தும் இல்லை.

ஆனா­லும், அவர்­கள் தங்­க­ளது உடல்­நி­லையை 14 நாள்­களுக்­குத் தாங்­க­ளா­கக் கண்­காணித்­துக்­கொள்ள வேண்­டும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் பய­ணத்­திற்கு 72 மணி நேரத்­திற்­குள் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­றி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

எல்­லாப் பய­ணி­களும் 'ஏர் சுவிதா' இணை­யப்­பக்­கத்­திற்­குச் சென்று, அதில் கேட்­கப்­பட்­டுள்ள விவ­ரங்­களை வழங்க வேண்­டும். அத்­து­டன், தாங்­கள் குறிப்­பிட்­டுள்ள விவ­ரங்­களும் கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழும் உண்­மை­யானவை எனும் உறு­தி­மொ­ழி­யை­யும் அவர்­கள் அளிக்க வேண்­டும்.

இத­னி­டையே, கொவிட்-19 தொற்று அபா­ய­முள்ள நாடு­கள் பட்­டி­ய­லும் வேறு அடிப்­ப­டை­யில் நாடு­கள் வகைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும் கைவி­டப்­ப­டு­கிறது.

வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் பய­ணி­களில் 2 விழுக்­காட்­டி­னர், தரை­யி­றங்­கும் விமான நிலை­யத்­தில் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் உமிழ்­நீர்/சளி மாதி­ரி­யைக் கொடுத்­த­பின் விமான நிலை­யத்­தை­விட்டு வெளி­யே­ற­லாம்.

இந்­தத் திருத்­தப்­பட்ட வழி­காட்டி நெறி­மு­றை­கள் அனைத்­தும் இம்­மா­தம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­பிற்கு வர­வுள்­ளன.

கடல்­வ­ழி­யா­க­வும் தரை­வ­ழி­யா­க­வும் வரு­வோ­ருக்­கும் இந்­தப் புதிய நெறி­மு­றை­கள் பொருந்­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!