அலுவலகத்துக்குத் திரும்பச் சொன்னதால் வேலையை உதறித் தள்ளிய 800 ஊழியர்கள்

அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்படி ஊழியர்களைக் கேட்டுக்கொண்ட இந்திய நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தது தலைவலி. 

உத்தரவு வந்த இரண்டு மாதத்தில் தகவல் தொழில்நுட்ப  நிறுவனம் ஒன்றின் 800 ஊழியர்கள் அங்கிருந்து விலகிவிட்டனர். 

குறியீட்டாக்கம் செய்ய சிறுவர்களுக்குக் கற்றுத் தரும் வயிட்ஹேட் ஜூனியர் நிறுவனத்தின் முழு நேர ஊழியர்கள் அவர்கள். 

மும்பை, பெங்களூர், குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள தனது கிளைகளுக்கு மீண்டும் திரும்பி வந்து வேலை செய்ய நிறுவனம் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தது. 

ஊழியர்களுக்கோ அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய விருப்பம் இல்லை. 

அதனால் ஊழியர்கள் தாமாகவே வேலையிலிருந்து விலகினர் என்று கூறப்பட்டது. 

ஆனால் செலவைக் குறைக்க நிறுவனமே ஊழியர்களை வேலையைவிட்டு விலகச் செய்வதாக ஊழியர்கள் சிலரோ கூறினர். 

இன்னும் பலர் வரும் மாதங்களில் வேலையை விட்டு விலகுவார்கள் என்றும் கூறப்பட்டது.  

வயிட்ஹேட் ஜூனியர் நிறுவனத்தை பைஜு'ஸ் நிறுவனம் 2020ல் வாங்கியது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!