பூம் பூம் பூம் காளை வந்தால் டும் டும் டும் வேளை வரும்

தனது மேளத்துடன் ஊர் ஊராக, கடை கடையாகச் சென்று யாசகம் கேட்டு பிழைக்கும் சேட்டு என்ற பூம் பூம் மாட்டுக்காரர் மணல்மேடு என்ற ஊரில் தென்பட்டார்.

காளை மாடு ஒன்றை அல்­லது காளைக் கன்று ஒன்றை எங்­கள் குடும்­பம் யாரி­டம் இருந்­தா­வது தான­மா­கப் பெற்­றால்­தான் என் மக­னுக்­குப் பெண் கொடுப்­பார்­கள் என்­கி­றார் சேட்டு என்­கிற பெரு மாள், 38.

தான­மா­கக் கொடுக்­கப்­பட்ட காளை மாடு­தான் எங்­கள் இன ஆண் பிள்­ளை­க­ளுக்­குப் பெண் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­கிறது.

இல்லை எனில் எவ்­வ­ளவு வயதா னாலும் தனி­யாக வாழ வேண்­டியதுதான் என்று 12 வயது ஆண் பிள்­ளைக்­குத் தந்­தை­யான சேட்டு கூறி­யதைக் கேட்டு வியந்தேன்.

உற­வி­னர் வீட்டு தேவைக்­காக புதுவை போய்­விட்டு, தன் குடும்­பம் தற்­கா­லி­க­மாக வசிக்­கும் செம்­பொன்­னார்­கோ­யில் என்ற ஊருக்­குப் போய்க்கொண்­டி­ருந்த சேட்டை மணல்­மேடு என்ற ஊரின் கடைத்­தெ­ரு­வில் சந்­தித்­தேன்.

"சுமார் 200 ஆண்­டு­க­ளுக்கு முன் ஆந்­தி­ரா­வில் இருந்து நாங்கள் தமிழ்­நாட்­டிற்கு வந்து பல பகுதி களிலும் கொத்துக்கொத்­தா­கக் குடி­யே­றி­னோம்.

"தெலுங்­கும் தமி­ழும் கலந்து பேசும் எங்­க­ளி­டையே பல பிரி­வு­கள் உண்டு. நாங்­கள் ஆதி­யன் என்ற பிரி­வைச் சேர்ந்த பூம் பூம் மாட்­டுக்­கா­ரர்­கள். காளை மாடு­தான் எங்­கள் குல­தெய்­வம்.

"எங்­க­ள் பாரம்பரியத்தில் குடும்­பத்­தில் பெண் குழந்தை பிறந்­தால் அதிர்ஷ்­டம். பெண் குழந்­தை பெற்றவர்களுக்குக் கடைசி வரை ஒரு செலவும் கிடை­யாது. அந்­தப் பெண்­ணைத் திரு­மணம் செய்து கொண்டு கடைசி வரை காப்­பாற்ற வேண்­டி­யது ஆண் மகன் கடமை.

"ஒரு பைய­னுக்குத் திரு­ம­ணம் ஆக வேண்­டு­மா­னால் அந்­தப் பையனி­டம் ஒரு பூம் பூம் காளை மாடு இருக்க வேண்­டும். அந்த மாடு யாரா­வது தானம் கொடுத்த மாடாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்­கிய மாடாக இருக்­கக்கூடாது.

"ஒரு காளை மாட்டை பராமரித்து அதை வைத்துப் பிழைக்க முடியும் என்றால், ஓர் ஆண் பிள்ளை ஒரு பெண்ணை கடைசி வரை வைத்து காப்பாற்றிவிட முடியும் என்பது எங்கள் இனத்தவரிடையே நிலவும் அசைக்க முடியாத நம்பிக்கை.

"என்னிடம் தானமாக கொடுக்கப்பட்ட ஒரு பூம் பூம் மாடு இருந்தது. அதை வைத்து பிழைப்பு நடத்தி வந்தேன். அதை நம்பி எனக்குப் பெண் கொடுத்தார்கள். கல்யாணி என் மனைவியின் பெயர்.

"எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளை­கள் உண்டு. என் 12 வயது பையனுக்காக ஒரு காளை மாட்டை தான­மா­கப் பெற நான் நடை­யாய் நடக்­கி­றேன். இப்­போ­தெல்­லாம் காளை மாட்டை தானம் கொடுக்க யாரும் முன்­வ­ரு­வ­தில்லை. பூம் பூம் மாடும் குறைந்­து­விட்­டது.

"வெறும் மேளத்தை வைத்­து­கொண்­டு­தான் ஊர் ஊராக, வீதி வீதி­யாக, கடை கடை­யாக, வீடு வீடா­கச் சென்று யாச­கம் கேட்டு பிழைக்­கி­றோம். நாளுக்கு ரூ.200 ரூ.300 கிடைக்கும்.

"என் பிள்ளைகளும் என் மனை­வி­யும் அதி­கா­லை­யி­லேயே கிளம்பி பல ஊர்­களுக்­கும் சென்று ஊசி, பாசி மணி­கள், திருஷ்டி பொம்மை கள் முதலானவற்றை விற்று வீடு திரும்­பு­வார்­கள். அதி­காலை ஐந்து மணிக்கு வீட்­டை­விட்டு புறப்­படும் நாங்­கள் பிற்­ப­கல் மூன்று மணி­ய­ள­வில்தான் வீடு திரும்புவோம்.

"பொது­வாக எங்­கள் இனத்­த­வர்­கள் ஓர் இடத்­தில் நிரந்­த­ர­மாக வசிப்­ப­தில்லை. இட­வ­ச­தி, கால நிலவரங்களுக்­கேற்ப பல இடங்­களுக்­கும் மாறி­மாறிச் சென்று வசித்து வரு­கி­றோம்.

"பூம் பூம் மாடு இருக்­கும்போது நாங்­கள் குறி சொல்­வோம். ஒரு வீட்­டிற்­குச் சென்று அந்த வீட்­டில் நல்­லது நடக்­கு­மாடா என்று மாட்டைப் பார்த்து கேட்­போம்.

"நடக்­கும் என்று மாடு தலை­யாட்­டும். அதைப் பார்த்து அந்த வீட்­டில் உள்­ள­வர்­கள் மகிழ்ச்­சி­அடைந்து காசு பணம் கொடுப்­பார்­கள். பழைய துணி­ம­ணி­க­ளைக் கொடுப்­பார்­கள். சாப்­பாடு போடு­வார்­கள். இப்­போது பூம் பூம் மாடு இல்லை. ஆகை­யால், குறி சொல்­வதை நிறுத்­தி­விட்­டோம். வெறும் மேளம்­தான் இப்­போது எங்­களுக்குக் கைகொ­டுக்­கிறது.

"அர­சாங்­கத்­தின் உத­வி­யால் எங்­கள் பிள்­ளை­களில் ஒரு சிலர் ஏதோ ஓர­ள­வுக்குப் படித்து வரு­கிறார்­கள். பிழைப்­பது சிர­ம­மா­கி­விட்­டது என்­ப­தால், எங்­கள் பிள்ளைகள், பிளாஸ்­டிக் பொருள்­விற்­பது, எரி­வாயு அடுப்பு பழு­து­பார்ப்­பது போன்ற சிறு­சிறு தொழில்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

"பூம் பூம் மாடு வைத்­தி­ருப்­போரி­டம் தோலால் செய்­யப்­பட்ட இரு பக்கம் அடிக்கும் உறுமி போன்ற மேளம் இருக்­கும். அது­தான் பூம் பூம் என்ற சத்­தத்தை ஏற்­ப­டுத்­தும்.

"ஆனால் இப்­போது என் போன்­றோ­ரி­டம் மாடு இல்லை என்­ப­தால் நாங்­கள் வெறும் பிளாஸ்­டிக்­கால் செய்­யப்­பட்ட மேளத்தை வைத்து பிழைக்­கி­றோம்," என்று கூறிய சேட்டு, மணல்­மேடு கடைத்­தெ­ரு­வில் ஒவ்­வொரு கடை­யாக ஏறி இறங்கி பெரு­மாள் அருள் புரி­வார், கோவிந்­தன் அருள் புரி­வார் என்று சொல்லி மேளத்தை அடிக்­கி­றார்.

சிலர் காசு போடு­கி­றார்­கள். சிலர் இல்லை என்று கூறி­வி­டு­கிறார்­கள்.

சேட்டு எதற்­கும் கவ­லைப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

சேட்டு தொடர்ந்தார், "தலைப்­பாகை, மஞ்­சள் குங்கு மம் பாசி­ம­ணி­க­ளு­டன் அலங்­கா­ர­மாக கடைத்­தெ­ரு­வில் வலம் வரும் நான், வேலை முடிந்­த­தும் ஒதுக்­குப் புற­மா­கச் சென்று இந்த வேடத்­தைக் களைத்­து­விட்டு வழ­க்க­மான உடையை அணிந்­து­கொண்டு பேருந்து ஏறி வீட்­டுக்கு சென்­று­வி­டு­வேன்," என்­றார் சேட்டு.

அப்­படி சேட்டு கூறி­யதை தலையை ஆட்­டி­ய­படி நான் கேட்­டுக்கொண்டு இருந்­ததை அப்­போது அங்கு வந்த என் நண்­பர் பார்த்­தார். 'என்ன அவர் (சேட்டு) சொல்­ வ­தைக் கேட்டு பூம் பூம் மாடு தலையாட்டுவதைப் போல் தலையை ஆட்டுகிறீர்­கள்' என்று என்­னைப் பார்த்து நண்­பர் கேட்­டார்.

ஒரு­வர் பேசு­வ­தைக் கேட்­கும் மற்­றொ­ரு­வர் பதில் சொல்­லா­மல் தலையை தலையை ஆட்­டி­னால் பூம பூம் மாடு போல் தலையை ஆட்­டு­கி­றீர்­கள் என்று கேட்­பது வழக்­கம். அந்த அள­வுக்கு இந்­திய பாரம்­ப­ரி­யத்­தில் தனிச்­சி­றப்­பு­மிக்க இடம்­பி­டித்­துள்­ளது பூம் பூம் மாடு கலா­சா­ரம். ஆனால் பூம் பூம் மாடும் அந்தக் கலாசாரமும் ­இப்­போது மிக­வும் அரி­தா­கி­விட்­டதே என்று கவ­லை­யு­டன், சேட்டு அடுத்த கடைக்­குச் சென்­ற­தைப் பார்த்த நான், அப்­ப­டியே அந்­தக் கால நினை­வில் மூழ்கிப்போனேன்.

சிறு­வ­ய­தில் பார்த்த பூம் பூம் மாடு மன­தில் நிழ­லா­டி­யது. பூம் பூம் மாடு மறைந்து வரு­கிறது. என்றா­லும் அதோ, எங்கோ ஒரு கடை­யில் சேட்டு அடிக்­கும் மேளச் சத்­தம் என் காதில் கேட்­கிறது.

அந்­தச் சத்­தம் முன்பு கேட்ட பூம் பூம் சத்­தம் போல் இல்லை. என்ன செய்­வது? காலம் மாறி­விட்­டது. ஆலை இல்­லாத ஊருக்கு இளுப்­பைப் பூதானே சர்க்­கரை?

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!