75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சிறுத்தைகள்

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் காடுகளில் சிறுத்தைகள் இன்று மீண்டும் வலம் வந்தன.

சிங்கங்கள், புலிகள் போன்ற பெரும்பூனைகளுடன் சீத்தா எனும் சிறுத்தைகளும் இந்தியாவின் தொன்மையான வேதங்களிலும் குகை ஓவியங்களிலும் தோன்றியுள்ளன. முகல் காலத்து மன்னர் அக்பர் 1,000 சிறுத்தைகளை வைத்திருந்தாராம்.

ஆனால் காலவோட்டத்தில் அந்த இனமே முற்றிலும் அழிந்துபோயின. தற்போது அந்நிலை மாறியுள்ளது.

தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று(செப்டம்பர் 17) 8 ‘சீத்தா’ வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.

இந்த சிறுத்தைகளை இந்தியப் பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சிறுத்தைகள், 3 ஆண் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்த முறை இந்தியாவிற்கு சிறுத்தைகளைத் திரும்பிக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியுள்ளார் திரு மோடி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!