பாட்னா நீதிபதி மீது வரதட்சணைக் கொடுமை புகார்; அதிகாரிகள் விசாரணை தொடங்கினர்

பாட்னா: பீகாரின் தலைநகர் பாட்னாவில் செயல்படும் சிவில் நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியான பிரதிப் ஷால் என்பவர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது.

அந்த நீதிபதி தன் மனைவியைத் துன்புறுத்தி வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நீதிபதியின் மனைவியான சாந்தினி சந்தா என்ற பெண்மணி அண்மையில் பாட்னாவில் உள்ள ராஜா பசார் பராஸ் மருத்துவமனையில் மாண்டுவிட்டார்.

தங்கள் பெண் மரணமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தினி சந்தாவின் பெற்றோர் தங்கள் மருமகனான நீதிபதி மீது புகார் தெரிவித்தனர்.

தங்கள் புதல்வியை அவரின் கணவரும் தங்களின் மருமகனுமான பிரதிப்பே கொன்றுவிட்டதாக காவல்துறையில் அவர்கள் புகார் செய்தனர்.

‘‘மரணமடைந்தவர் பாட்னா நகர சிவில் நீதிமன்ற நீதிபதியின் மனைவியாவார். அந்தப் பெண்மணியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘‘அந்தப் பெண்மணி வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார் என்று அவர்கள் புகாரில் தெரிவித்து இருக்கிறார்கள்.

‘‘இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான புலன்விசாரணை தொடங்கி இருக்கிறது,’’ என்று தானாபூர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘‘எங்கள் புதல்விக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆகஸ்ட் 14ஆம் தேதி எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

‘‘தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த எங்கள் மகளின் உடல்நிலை மேம்படவே இல்லை. எங்கள் மகளை நாங்கள் பாரஸ் மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை அளித்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

‘‘எங்கள் மருமகனும் அவரின் உறவினர்களும் எங்கள் மகளை இடைவிடாமல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.

‘‘எங்களுடைய புதல்வியின் மரணத்திற்கு அவர்கள்தான் காரணம்,’’ என்று அந்தப் பெண்ணின் தந்தையான அசோக்குமார் காவல்துறையில் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்தார்.

சாந்தினிக்கும் பிரதிப்பிற்கும் 2022 மே 11ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 22 லட்சம் ரூபாய் பணத்தையும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஒரு காரையும் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் கொடுத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

இதனிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்துரைத்த சாந்தினியின் தாயார், ‘‘என்னுடைய மகளைச் சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

‘‘ஒரு தடவை கூட பிறந்த வீட்டிற்கு வர எங்கள் பெண்ணை அவர்கள் அனுமதிக்கவில்லை. கைப்பேசியையும் பிடுங்கிவைத்துக் கொண்டார்கள். அப்போதைக்கு அப்போது பணம் கேட்டு எங்கள் மருமகன் மிரட்டல் விடுப்பார்.

‘‘இது பற்றி ரகசியமாக எங்கள் மகளிடம் கேட்டபோது, கணவர் நீதிபதியாக இருப்பதால் நாம் எல்லாரையும் வழக்குகளில் மாட்டிவிட்டு சிறையில் தள்ளிவிடுவார். ஆகையால், நடப்பது நடக்கட்டும் பேசாமல் இருங்கள் என்று எங்கள் வாயை எங்கள் மகள் அடைத்துவிடுவாள்,’’ என்று அந்தப் பெண்மணி அழுதுகொண்டே கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!